kerala-logo

கணவருடன் சண்டை… பெட்டி படுக்கையுடன் சென்னை திரும்பிய ரம்பா; கணவருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்!


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது நடிப்பில் இருந்து விலகியுள்ள ரம்பா மீண்டும் நடிக்க வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவர் தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு சொல்லாமல் சென்னை திரும்பியது குறித்து பேசியுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்பா. இதனைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ரம்பா, கமல்ஹாசனுடன் காதலா, காதலா, ரஜினிகாந்துடன் அருணாச்சலம் என தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும் விஜயுடன் நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ரம்பா, சில சேனல்களில், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ள ரம்பா, இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை, திருமணம் செய்துகொண்டு, கனடாவில் செட்டில் ஆனார். அவருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகள் என 3 பிள்ளைகள் உள்ள நிலையில், 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பியதாகவும் உடல் ஒத்துழைக்காததால், 3 குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டதாக கூறியிருந்தார்.
இதனிடையே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்பா, ஒருமுறை தனது கணவருடன், சண்டை போட்டுவிட்டு, தனது திங்ஸ் எல்லாம் பேக் செய்து எடுத்துக்கொண்டு, ப்ளைட் டிக்கெட் புக் செய்து, சென்னை திரும்பிவிட்டேன். பிளைட்டில் ஏறியபோது தான் எனது வீட்டுக்கு போன் செய்து, என்னை வந்து பிக்கப் செய்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். அவர்கள் அனைவரும், அதிர்ச்சியாகி ஏன் என்னாச்சு என்று கேட்டார்கள். அதன்பிறகு நான் சென்னை வந்துவிட்டேன்.
சென்னை வந்தபிறகு, எனது கணவருக்கு போன் செய்யவே இலலை. ஆனால், எனது அண்ணன் தான் அவரிடம் போன் செய்து நான் சென்னை வந்த விஷயத்தை சொன்னார். அவர் அதிர்ச்சியாகிவிட்டார். நான் இங்கு வந்தது தெரியாமல் அவர், கனடாவில் என்னை தேடிக்கொண்டு இருந்துள்ளார். கோபத்தில் சில சமயங்களில் நான் தைரியமாக முடிவு எடுப்பேன். இல்லை என்றால், வீட்டுக்குள் பெட்டி பாம்பாக உட்கார்ந்திருப்பேன். எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக்கொண்டிருப்பேன். ஆனால் கோபம் வந்துவிட்டால், என்னால் எதையும் செய்ய முடியும் என்று துணிச்சலாக கிளம்பிவிடுவன் என்று கூறியுள்ளார் ரம்பா.

Kerala Lottery Result
Tops