kerala-logo

கண்ணதாசன் பாட்டில் பிழை: அவரிடமே கேட்ட வாலி: இந்த ஹிட் பாடல் உண்மையில் தவறா?


கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத வந்திருந்தாலும் அவருடன் நெருக்கமான நட்புடன் இருந்த கவிஞர் வாலி, எழுதிய பாடல் ஒன்றில் பிழை இருப்பதாக கண்டுபிடித்து கண்ணதாசனிடமே இது குறித்து கேட்டுள்ளார். அது என்ன பாடல் தெரியுமா?
1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் மன்மத லீலை. கமல்ஹாசன், ஆலம், ஹேமா சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் ப்ளேபாய் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க கவியரசர் கண்ணதாசன் அனைத்து எழுதியிருப்பார். தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகம் இருக்கும் நாயகன் மனைவி இருந்தாலும், தான் பார்க்கும் பெண்கள் அனைவரையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
அந்த வகையில் ஒரு பெண்ணுடன் கமல்ஹாசன் பழகுகிறார். நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவருக்கு, கணவன், குடிகாரனமாக அமைந்து விட்டதாக சொல்கிறார். இவரை அடைய வேண்டும் என்று நினைக்கும் கமல்ஹாசன், அதற்காக அவருடன் நெருங்கி பழகுகிறார். அப்போது அவர் எனக்கு இன்னொரு கணவன் இருக்கிறார். அவர் இந்த ரேடியோதான் என்று சொல்கிறார். ரோடியோ என்ன கம்பெனி என்று கமல்ஹாசன் கேட்க அவர் பிலிப்ஸ் என்று சொல்கிறார்.
அதை கேட்ட கமல்ஹாசன், அப்போ நீங்க மிஸஸ் பிலிப்ஸ் என்று சொல்கிறார். அதன்பிறகு தான் ‘’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”, என்ற பாடல் ஒலிக்கும். இந்த பாடல் முழுவதுமே கமல்ஹாசன் அந்த பெண்னை அடைவதற்காக எப்படி அவரிடம் பேசுகிறார் என்பதையே பாடல் வரிகளாக வைத்திருப்பார் கண்ணதாசன். கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த பாடலில் சந்தேகம் ஏற்பட்ட வாலி, அந்த பெண்ணுக்கு கணவன் தான் சரியாக அமையவில்லை. இந்த பெண் சரியாகத்தான் இருக்கிறாள். அதனால் கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று தானே எழுதியிருக்க வேண்டும், இந்த பாடல் தப்பு என்று கவிஞர் வாலி கண்ணதாசனிடம் கூறியுள்ளார். இந்த கேள்விக்கு கண்ணதாசன் பதில் கூறியிருந்தாலும், அது இங்கு சொன்னால் நன்றாக இருக்காது என்று கூறிய வாலி, இயக்குனர்கள் தான் அந்த தவறை திருத்த வேண்டும் என்று கண்ணதாசன் கூறியதாக வாலி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Kerala Lottery Result
Tops