பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை காவியா அறிவுமணி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த நடிகை காவியா அறிவுமணி சீரியல் நடிகையாக இருந்து தற்போது திரைபடங்களில் நடித்து வருகிறார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பிரபலமானவர். அடிப்படையில் ஆர்க்கிடெக்ட் பட்டம் பெற்ற இவர், படித்துக்கொண்டே சீரியலில் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகி தனது கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் 2022-ம் ஆண்டு மிரள், மற்றும் ரிப்பப்பரி படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த இரு படங்களுமே ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அறிவுமணி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கருப்பு உடை கதைகள் எப்போதும் முடிவுக்கு வராது என்று கூறியுள்ளார்.
