பங்களா, கார், வேளையாட்கள் என்று வசதியாக வாழ்ந்த நடிகை, உடல்நலப் பிரச்சனையால் சிகிச்சைக்காக அனைத்தையும் இழந்து, கடைசி கலாத்தில் அவதிப்பட்டு வந்த நடிகை பிந்து கோஷ் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 76. அவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்கு திங்கள்கிழம் நடைபெறுகிறது.
சினிமாவில் ஒருசில நடிகர்கள்தான், நிஜ வாழ்க்கையில் மற்றவர்கள் தன்னை உருவகேலி செய்யக்கூடிய உடலமைப்பு இருந்தாலும், அதையே தங்களின் பலமாக மாற்றிக்கொண்டு சினிமாவில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வரிசையில், தனது உடல் குண்டு உடல்வாகு மூலம் சினிமாவில் நகைச்சுவ் காட்சிகளில் நடித்து பிரபலமனாவர் நடிகை பிந்து கோஷ்.
தமிழ் சினிமா உலகில் 1980-களில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் நடித்த பிந்துகோஷ், அவர் ஒரு நல்ல டான்சர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவருடைய இயற்பெயர் விமலா. உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா-தான் பிந்துகோஷுக்கும் முதல் படம். ஆம், அந்தப் படத்தில், பிந்து கோஷ் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு குழு நடனம் ஆடியிருப்பார்.
நடிகை பிந்துகோஷ் தங்கப்பன் மாஸ்டரின் அனைத்து படங்களிலும் குழு நடனத்திலும் நடித்துள்ளார். நல்ல டான்சராகவும் இருந்த பிந்துகோஷ், உடல் எடை கூடினாலும், அதையே சினிமாவில் பிளஸ்ஸாக மாற்றினார். நகைச்சுவை வேடங்களில் நடித்து கலக்கினார். நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை பிந்துகோஷ் வயது மூப்பின் காரணமாக உடல்நலப் பிரச்னைகளால் பாதிகப்பட்டு, சிகிச்சைக்கு மருத்துவ உதவி கிடைக்காமல், வறுமையில் அவதிப்பட்டு வந்தார். நடிகர் விஷால், பிந்து கோஷின் நிலைமையை அறிந்து நிதி உதவி செய்தார். ஆனாலும், பணம் போதவில்லை.
அன்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை பிந்துகோஷ், “தூங்காதே தம்பி தூங்காதே பட சூட்டிங்கின்போது, வயிறு பெரிதாக உள்ளதால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, 13 கிலோ சதையை எடுத்தேன். அந்த சர்ஜரிதான் நான் செய்த தவறு. இதற்கு பிறகு பிபி, சுகர் என பாதிக்கப்பட்டு, ஹார்ட் ஆபரேஷன் வரை செய்தேன். ஆனால், அதற்கு பிறகு சிகிச்சை செய்ய வசதியில்லை. ஒரு அறக்கட்டளை தான் மருத்துவ உதவி செய்கிறது. கமல்ஹாசனிடம் உதவி கேட்டு போன் செய்தும் பதில் சொல்லவில்லை. பிரபு, சத்யராஜ் என்று பலருக்கும் போன் செய்தேன். யாருமே எனக்கு உதவி செய்யவில்லை. யாரேனும் உதவி செய்யுங்கள்” என்று கூறியிருந்தார்.
பிந்துகோஷின் இந்த நிலையைப் பார்த்து, நடிகை ஷகிலா மூலம் கே.பி.ஒய் பாலா பிந்துகோஷ் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து 80,000 பணம் கொடுத்து உதவினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்றும் பிந்துகோஷ் கேட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், நடிகை பிந்துகோஷ் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, நடிக் பிந்துகோஷ், சென்னை தசரதபுரத்தில் பங்களா வீட்டை வாங்கி வசித்திருக்கிறார். கார், பங்களா, 4 வேலையாட்கள் என வசதியாக வாழ்ந்த பிந்து கோஷ், சிகிச்சைக்காக வீடு, பணம், அனைத்தையும் இழந்து, வாடகை வீட்டுக்கு சென்று வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத நிலைமையை சென்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா, கமல்ஹாசன் என பல மூத்த நடிகர்களுடன் நடித்த பிந்து கோஷ் இறந்த செய்தி தமிழ் சினிமா உலகில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய இறுதி சடங்குகள் இன்று (17.03.2025) நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
