kerala-logo

கார் ரேஸில் தீவிரம்: ரசிகர்களுக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்த அஜித்; வைரல் வீடியோ!


துபாய் ரேஸ் முடியும் வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள நடிகர் அஜித் கார் ரேஸில் தன்னை பார்க்க வந்த ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், படங்களில் நடிப்பதை தவிர, துப்பாக்கிச்சுடுதல், பைக்ரைடு செல்லுதல், மற்றும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பது என விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து முடித்துள்ள அஜித், துபாயில் நடைபெறும், கார் ரேஸில் பங்கேற்க உள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு, அஜித் குமார் கார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கிய அஜித், தனது கார் ரேஸிங் அணியையும் கட்டமைத்தார். தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள அஜித், கார் ரேஸிங் பந்தையத்திற்கு தாயராகும் வகையில், துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அஜித் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவரது கார் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே தற்போது துபாய் கார் ரேஸ்க்காக தயாராகி வரும் அஜித், அடுத்த 9 மாதங்களுக்கு நடிப்பில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அஜித் 9 மாதங்கள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள விடா முயற்சி திரைப்படம், ஜனவரி மாதமும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மே 1-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
A post shared by 𝐀𝐉𝐈𝐓𝐇𝐊𝐔𝐌𝐀𝐑🦁 (@kingmekar_ajith_salem)
பொதுவாக படங்களில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளும் அஜித், தனது படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சி, ஆடியோ வெளியீட்டு விழா, டிவி நேர்காணல் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அதேபோல் தனக்கு ரசிகர் மன்றமே தேவையில்லை என்று கலைத்த அஜித், எங்கும் தனது ரசிகர்களை சந்தித்ததே இல்லை. இதனிடையே, தற்போது தான் கார் ரேஸில் பங்கேற்க உள்ள நிலையில், தன்னை பார்க்க வந்த ரசிகர்களை பார்த்து அஜித் கையசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ரசிகர்களுக்கு அவர் ப்ளையிங் கிஸ் கொடுத்துள்ளார்.

Kerala Lottery Result
Tops