kerala-logo

கால் உடைந்து தவிக்கும் ரம்யா.. கார்த்திக்கு காத்திருந்த ஏமாற்றம் காரணம் என்ன?


கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா விக் இருந்த பேக்கை கையில் எடுத்து அதை எல்லாரும் பார்த்த நிலையில் இன்று, இந்த பேக் எப்படி வந்தது என்று விசாரிக்கும் போது அருண் காரில் இருந்தது நான் தான் கொண்டு வந்தேன் என்று சொல்ல கார்த்திக் இளையராஜா சட்டையை பிடித்து என்னடா இது என்று கேட்க அவன் இது என்னுடைய பேக் இல்ல அந்த சேகர் பேக்காக இருக்கும் என்று சொல்கிறான்.

உடனே இரண்டு பேரும் சேகர் வீட்டிற்கு வருகின்றனர், வீடு பூட்டி இருக்க இளையராஜா அப்போ அந்த சேகர் தான் போலி சாமியாராக இருப்பான் என்று சொல்லி திரும்ப சேகர் அங்கு நிற்கிறான். “இது உன்னுடைய பேக் தானே?” என்று விசாரிக்க அவன் “என்னுடையது இல்ல” என்று சொல்லி வீட்டு கதவை திறந்து “என் பேக் இங்க இருக்கு” என்று சொல்லி கன்பியூஸ் செய்கிறான்.

அடுத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் செய்து நாடகக் காரர் ஒருவருடைய பேக் என்று சொல்ல கார்த்திக்கு குழப்பம் அதிகமாகிறது. இருந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் கார்த்திக் அமைதியாகி விடுகிறான். அடுத்து ரம்யா கான்ஸ்டபிள் மற்றும் அவருடன் சேர்ந்து நடித்தவனுக்கு பணத்தை கொடுத்து அங்கிருந்து கிளம்பி தீபா வீட்டிற்கு வருகிறாள்.

அடிக்கடி ரம்யா வீட்டிற்கு வருவது தப்பாக இருப்பதாக யோசிக்கும் மைதிலி மற்றும் மீனாட்சி படிக்கட்டில் சோப் தண்ணியை ஊற்றி ரம்யாவை விழ வைக்க, அவளுக்கு காலில் அடிபடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புது சிக்கலை உருவாக்கிய ஸ்வேதா.. அசால்டாக ஆப்பு வைத்த பாரதி

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் துரை மீண்டும் ஆதியை ஸ்கூலில் சந்தித்து வம்பிழுக்க, தமிழ் இருந்ததால் ஆதி அமைதியாக இருந்த நிலையில் இன்று, துரை அங்கிருந்து சென்றதும் தமிழ் “நீங்க முன்ன மாதிரி இல்ல பா.

Join Get ₹99!

.. நான் உங்க கிட்ட பேச மாட்டேன்” என்று கோபித்து கொண்டு சென்று விடுகிறாள். இதனை தொடர்ந்து ஆதி மீண்டும் துரையை சந்தித்து அடி வெளுத்து எடுத்து ஓட விடுகிறான். மறுபக்கம் பாரதி ஆபிஸ்க்கு கிளம்பி வர மலரை தவிர்த்து யாரும் இல்லாமல் காலியாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

“ஏன் யாரும் இல்லை?” என்று கேட்க ஸ்வேதா மேடம் “எல்லாருக்கும் சம்பளத்துடன் 10 நாள் லீவ் கொடுத்து அனுப்பி விட்டதாக” சொல்ல, “ஸ்வேதா எப்படி இதை பண்ண முடியும்” என்று கேள்வி எழுப்புகிறாள். பிறகு அங்கு வந்த ஸ்வேதா “ஒரே ஒரு நாள் எம்.டி-ஆ இருந்த உனக்கே அவ்வளவு இருக்கும் போது எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று சவால் விடுகிறாள்.

பாரதியும் மலரும் ஒவ்வொருவருக்காக போன் செய்து பார்க்க, யாரும் எடுக்காமல் இருக்க ஸ்வேதா “உன்னால் ஒன்னும் பண்ண முடியாது” என்று திமிர் காட்டுகிறாள், அதனை தொடர்ந்து ஆதி ஆபிஸ் வர, மலர் நடந்த விஷயத்தை சொல்லி உதவி கேட்க, ஆதி “அது அவங்களுக்கு இடையேயான பிரச்சனை, நான் என்ன செய்ய முடியும்” என்று கை விரித்து விடுகிறான்.

அதன் பிறகு பாரதி எல்லாருக்கும் வேலைக்கு வராதவர்களுக்கு பதிலாக புதியதாக ஆள் எடுக்க போவதாக தகவல் அனுப்புகிறாள், அறிவுக்கு இந்த மெஸேஜ் வர ஸ்வேதா ஆபிஸ் வந்து “நான் எல்லா ஏரியாவையும் பிளாக் பண்ணி வச்சிருக்கேன், ஒருத்தவரும் வர மாட்டாங்க” என்று சொல்ல, பாரதி “கொஞ்சம் அங்க பாரு” என்று காட்ட, எல்லாரும் வேலையில் வந்து சேர்ந்திருப்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Kerala Lottery Result
Tops