kerala-logo

கில்லி முதல் குணா வரை: 2024-ல் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தமிழ் படங்கள்!


2024-ம் ஆண்டு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்,உலக மக்கள் அனைவரும் 2025-ம் ஆண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். இதனிடையே ஆண்டில் இறுதியில், 2024ம் ஆண்டு நடந்த சுவாரஸ்யமாக நிகழ்வுகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது.  அந்த வகையில், இந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட குறிப்பிட்ட சில படங்களை பார்ப்போம்.
கில்லி
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. தெலுங்கில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக் தான் என்றாலும், ஒரிஜினலை விட விறுவிறுப்பான திரைக்கதையுடன் படமாக்கப்பட்ட இந்த படம் விஜயின் சினிமா வாழ்ககையில் முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் ரீ-ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்கள் பலரும் ஒரு புது படத்திற்கு, டிக்கெட் முன்பதிவு செய்வது போல், பரபரப்பான முன்பதிவு செய்திருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் 30 கோடிக்கு மேல் வசூலித்தது.
மங்காத்தா
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் வித்தியாசமான நடித்த பங்களில் ஒன்று மங்காத்தா. அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் 2011-ம் ஆண்டு வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா அமைத்த மாஸ் பின்னணி இசை இன்றும் அஜித் ரசிகர்களின் ரிங்டோனாக இருந்து வருகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளே மங்காத்தா ரூ10 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அழகி
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான தங்கர்பச்சன் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அழகி. கடந்த 2002-ம் ஆண்டு வெளியான இந்த படம், அப்போது திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்தது. இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ரீரிலீஸ் செய்யப்பட்டபோதும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
குணா
தனது சினிமா வாழ்க்கைளில் பெரும்பாலான படங்களை சோதனை முயற்சியாக கொடுத்து, அதில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்துள்ளவர் கமல்ஹாசன். இவர் நடித்த சோதனை முயற்சியான படங்கள் அப்போது வரவேற்பை பெறவில்லை என்றாலும் காலம் கடந்து இன்றும் பேசப்படக்கூடிய படங்களாக நிலைத்திருக்கிறது. அந்த வகையிலான ஒரு படம் தான் குணா. சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான இந்த படம் 33 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட வரவேற்பை பெற்றிருந்தது.
பருத்தி வீரன்
அமீர் இயக்கத்தில் கார்த்தி- பிரியாமணி இணைந்து நடித்த க்ளாசிக் படம் பருத்தி வீரன். அமீரே நினைத்தால் இப்படி ஒரு படத்தை இனிமேல் எடுக்க முடியாது என்று பலரும் கூறிய இந்த படம், கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் 17 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
இதேபோல், சிம்புவின் எவர்க்ரீன் படமான விண்ணைத்தாண்டி வருவாயா, தனுஷ் நடிப்பில் த்ரி, மயக்கம் என்ன, அரவிந்த் சாமி, பிரபுதேவா கஜோல் இணைந்து நடித்த மின்சார கனவு, அஜித் நடித்த மயக்கம் என்ன, கார்த்தியின் பையா, சூர்யாவின் வாரணம் ஆயிரம், கமல்ஹாசனின் கமல்ஹாசனின் வேட்யைாடு விளையாடு, ஆளவந்தான், ரஜினிகாந்த் நடிப்பில் முத்து ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

Kerala Lottery Result
Tops