கடந்த ஆண்டு இறுதியில் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தல பொங்கலை கொண்டாடி வரும் நிலையில், தயாரிப்பாளர் ஜெகதீசன் பழனிச்சாமி ஏற்பாடு செய்த பொங்கல் விழாவில், கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தளபதி விஜய் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கோவாவில்நடைபெற்றது. இந்த திருமணத்தில் தளபதி விஜய் சர்ப்ரைஸ் விசிட்டாக கலந்துகொண்டார். அவருடன் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின் தனது முதல் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார். தளபதி விஜயின் அட்மின் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் ஜெகதீசன் பழனிச்சாமி, தி ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், கீர்த்தி சுரேஷ்க்கு தல பொங்கல் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரெஷ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தளபதி விஜய் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோவை, தி ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு, அரசியலில் தீவிரம் காட்சி வரும் விஜய், தற்போது நடித்து வரும் தனது 69-வது படத்துடன், நடிப்பில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற, கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கேற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷின் தல பொஙகல் கொண்டாட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தில், பொங்கல் வைத்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பானை உடைக்கும் போட்டிகள், நடைபெற்றது. இதில் கீர்த்தி சுரேஷூடன், நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் கதிர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் மியூசிக்கல் சேர் போட்டியும் நடைபெற்றுள்து. இதில், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் கொண்ட பெண்கள் அணியும், ஆண்டனி தட்டில், ஜெகதீசன் பழனிச்சாமி ஆகியோர் கொண்ட ஆண்டகள் அணியும் மோதியது.
பொங்கல் தினத்தில், அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் வெளியாகவில்லை என்றாலும், துபாய் ரேஸில் அஜித்தின் அணி 3-வது இடத்தை பிடித்த வீடியோக்கள், மற்றும் விஜய் பொங்கல் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ அவரவர் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.