தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தனது ஆவணப்படம் தொடர்பான நடிகர் தனுஷ் குறித்து கொடுத்த அறிக்கை வெளியானதில் இருந்து அடிக்கடி சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் 3 பத்திரிக்கையாளர்ளை குரங்கு என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவரது திருமணத்தை நெட்பிளிக்ஸ்க்கு விற்பனை செய்த நிலையில், அதற்கு தேவையாக ஃபுட்டேஜ் கிடைக்கவில்லை என்பதால், படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா தொடர்பான காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
அதேபோல் தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்காததால், அவரை கடுமையாக விமர்சித்து நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதில் பலரும் தனுஷ்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், வலைப்பேச்சு யூடியூப் சேனலில் இருக்கும் அந்தனன், பிஸ்மி, சக்திவேல் ஆகிய மூவரும் தனுஷ் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் நயன்தாரா நடந்துகொண்ட விதம், உள்ளிட்ட பல தகவல்களை வலைப்பேச்சு சேனலில் மூவரும் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோக்கள் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நயன்தாரா இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இதனிடையே தற்போது இவர்கள் மூவரையும் குரங்கு என்று நயன்தாரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில், கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என 3 குரங்குகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், கெட்டதை பார், கெட்டதை கேள், கெட்டதை மட்டுமே பேசு என சொல்லும் 3 மோசமான குரங்குகள் சினிமா கிசுகிசுக்களை பற்றி பேசியே வயிற்றை வளர்த்து வருகின்றனர். அவங்க ஒரு 50 வீடியோ போட்டிருந்தால் அதில், என்னைப் பற்றி மட்டும் 45 வீடியோவில் பேசியிருப்பார்கள்.
ஏனென்றால், என்னைப் பற்றி பேசினால் தான் வியூஸ் வரும். அதை வைத்து காசு பார்க்கலாம். எப்படியோ என்னைப் பற்றி தப்பாக பேசி சம்பாதித்து சிலர் சாப்பிட்டால் அது கூட எனக்கு சந்தோஷம் தான். அவங்க சம்பாதிச்சாலும் சரி, தனுஷ் சம்பாதிச்சாலும் சரி எனக்கு ஹேப்பி தான் என நயன்தாரா பேசியுள்ளார். நயன்தாராவின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே யோகிபாபு, வலைப்பேச்சு தன்னிடம் பணம் கேட்டதாக கூறியதை தொடர்ந்து அதற்கு ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்த பிஸ்பி, அந்தனன், சக்திவேல் ஆகிய மூவரும் தற்போது நயன்தாரா குரங்கு என்று விமர்சித்ததற்கும் தங்கள் விளக்கம் மற்றும் பதிலடியை தங்கள் வீடியோ மூலம் கொடுத்துள்ளனர்.
