கைது செய்யப்படும் கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு, ரேவதிக்கு ஷாக் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம்,சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் காணாமல் போக மாயா போலீசுக்கு தகவல் கொடுக்க சொன்ன நிலையில் இன்று, போலீஸ் மண்டபத்திற்கு வர ரேவதி எனக்கு ட்ரைவர் ராஜா மேலே தான் சந்தேகமா இருக்கு என்று சொல்கிறாள். சாமுண்டீஸ்வரியும் எனக்கும் ராஜா மேல் தான் சந்தேகம் இருப்பதாக சொல்ல போலீஸ் கார்த்தியை கைது செய்து அழைத்து செல்கின்றனர்.
அடுத்து அருண் 3 பெரிய லாயர்களுக்கு போன் செய்து கார்த்தியை வெளியே எடுக்க ஏற்பாடு செய்ய சொல்கிறான், சாமுண்டீஸ்வரி ராஜராஜனிடம் நான் ராஜாவுக்கு சப்போர்ட் பண்றது தெரிந்தா ரேவதிக்கு சந்தேகம் வரும். அதனால் தான் அப்படி சொன்னதாகவும் ராஜாவை வெளியே எடுக்க லாயர்களை அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறாள்.
மேலும் டி.ஐ.ஜி-க்கு தகவல் தெரிந்து அவர் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து கார்த்தியை வெளியே விட சொல்கிறார், இதனால் போலீஸ் மீண்டும் கார்த்தியை மண்டபத்திற்கு அழைத்து வருகின்றனர். அவரை விசாரணை செய்தாச்சு.. அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறார்கள். உடனே சாமுண்டீஸ்வரி மகேஷ் எங்க போனானு தெரியல, ராஜா மேலயும் தப்பு இல்ல. அதனால் ட்ரைவர் ராஜாவுக்கும் ரேவதிக்கும் கல்யாணம் செய்து விடலாம் என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். அதெல்லாம் முடியாது என மறுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உடையும் அடுத்த ரகசியம்.. அதிர்ச்சியில் உறையும் மகேஷ், நடந்தது என்ன? கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் முருகன் சம்பளத்தை கொண்டு வந்து லட்சுமியிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிய நிலையில் இன்று, சிவராமன் உன்னை ஏளனமா பேசுனவங்க முன்னாடி எல்லாம் நீ நல்லா வாழ்ந்து காட்டணும் என சொல்கிறார். அடுத்ததாக துளசி வெற்றிக்கு போன் செய்து என்ன சார் அந்த பையனை அப்படி அடிச்சி வச்சிருக்கீங்க என்று கேட்கிறாள்.
மேடம் உங்க பின்னாடி சுத்துனா சும்மா விட முடியுமா என்று கேட்க துளசி அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தா எங்க ரெண்டு குடும்பத்துக்கும் பெரிய பிரச்சனையே ஆகி இருக்கும். இனிமே நீங்க எதுவும் பண்ண வேண்டாம் நானே பார்த்துக்கறேன் என்று சொல்லி போனை வைக்கிறாள். பிறகு தனது வீட்டிற்கு கட்டுடன் வந்த வெற்றி இங்கும் ஆக்சிடென்ட் ஆகி விட்டதாக பொய் சொல்லி சமாளிக்கிறான்.
அடுத்ததாக மகேஷ் அஞ்சலியிடம் தனக்காக ஒரு பாட்டு பாட சொல்லி ரொமான்ஸ் செய்கிறான். இதெல்லாம் முடிந்த பிறகு மகேஷ் மற்றும் சிவராமன் பேசும் போது முருகன் பற்றிய பேச்சு அடிபடுகிறது, சிவராமன் முருகன் நாங்க தத்தெடுத்த பிள்ளை என சொல்கிறார். மேலும் நீங்க வளர்ந்த ஆசிரமத்தில் தான் முருகனும் வளர்ந்ததாக சொல்ல மகேஷ் அதிர்ச்சி அடைகிறான். பிளாஷ்பேக்கில் சிவராம் மகேஷ் குறித்து விசாரிக்க சென்றிருந்த போது குழந்தையை கொன்னுடுவேன் என்று மிரட்டி தன்னை பற்றி நல்ல விதமாக சொல்ல வைத்த விஷயம் தெரிய வருகிறது.
அடுத்து முருகனின் உண்மையான பெயர் என்ன என்று கேட்க அர்ஜுன் என்று சொன்னதும் மகேஷ் உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறான். உடனே அஞ்சலியிடம் வந்து முக்கியமான மீட்டிங் இருக்கு.. இன்னைக்கே கிளம்பி ஆகணும் என்று சொல்கிறான். அஞ்சலியும் தனது குடும்பத்தாரிடம் சொல்ல தல தீபாவளி சீர் செய்து இருவரையும் அனுப்பி வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அறிவழகனுடன் இரண்டாவது திருமணம்? ரத்னாவின் வாழ்க்கைக்காக சண்முகம் எடுக்கும் முடிவு – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த வெங்கடேஷ் நேராக ஸ்கூலுக்கு சென்று அறிவழகனிடம் சண்டையிட்ட நிலையில் இன்று, வெங்கடேஷ் ரத்னாவிடம் இவனை கல்யாணம் பண்ணிக்க தானே என்னை கழட்டி விட்ட? உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா வாழ விட மாட்டேன் என்று சொல்கிறான். வீட்டுக்கு வந்த ரத்னா ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்ல சென்னையிலிருந்து வந்த சண்முகம் இதை கேட்டு வெங்கடேசை வெட்டப் போக பரணி தடுத்து நிறுத்துகிறாள்.
அதன் பிறகு முதல்ல அந்த வெங்கடேஷ் கிட்ட இருந்து ரத்னாவுக்கு விடுதலை வாங்கி கொடுக்கணும் பஞ்சாயத்து கூட்டு என்று சொல்ல சண்முகம் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக சொல்கிறான். அடுத்து அறிவழகன் வீட்டுக்கு வரேன் அவன் ரத்னா சிறுவயதில் இருந்து பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் சேகரித்து வைத்திருப்பது தெரிய வருகின்றது. இதை கவனித்த கனி அக்காவை அறிவழகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்று சொல்கிறாள்.
பரணி மற்றும் சண்முகம் என இருவருக்கும் அது சரியாகப்பட அறிவழகன் வீட்டில் பேசுவதற்காக சண்முகம் கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
