தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், சமீபத்தில் நடிகை த்ரிஷாவுடன் கோவா சென்றுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும், விஜய் மனைவி சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என்று கூறி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 69-வது படத்தில் நடித்து வருகிறார். இடையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தனது 69-வது படத்துடன் நடிப்பில் இருந்த விலகி, தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவரின் கடைசி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல், சினிமா வட்டாரத்தில் நடிகை த்ரிஷா – விஜய் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. அதேபோல் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன, த்ரிஷா, அவருடன் லிப்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும், 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்த த்ரிஷா இந்த படத்தில் முத்த காட்சியில் நடித்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதை வைத்து இருவருக்கும் இடையே நட்பை தாண்டி வேறு ஏதேனும் இருக்குமோ என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்த நிலையில், சமீபத்தில் வெளியான விஜயின் கோட் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அந்த படத்தில் ஒரு பாடலுக்கு விஜயுடன் த்ரிஷா நடமாடியிருந்தார். இதனிடையே விஜயுடன் 2 படங்களில் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று கோவாவில் நடைபெற்றது. கீர்த்தி சுரேஷ் நடிகை த்ரிஷாவுக்கு நெருங்கிய தோழியாக இருக்கிறார்.
இவரின் திருமணத்திற்கு விஜய் – த்ரிஷா இருவரும், தனியார் ஜெட் விமானத்தில் ஒன்றாக கோவா சென்று திரும்பியுள்ளனர். ஆனாலும் விஜய் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் இருந்த புகைப்படங்கள் வெளியான நிலையில், த்ரிஷாவின் புகைப்படம் ஒன்று கூட வெளியாகிவ்லலை. ஆனாலும் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது விஜய் த்ரிஷா இருவரும் ஒன்றாக இறங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விஜய் மனைவி சங்கீதாவுக்கு ஆதரவாக ஜெஸ்டிஸ் ஃபார் சங்கீதா என்ற ஹேஷ்டேக்டை டெரண்ட் செய்து வருகின்றனர்.
