kerala-logo

கோவை மருதமலையில் நடிகர் கரண் சாமி தரிசனம்: வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்


கோவை மருதமலை திருக்கோவிலில் தமிழ்த் திரைப்பட நடிகர் கரண் சாமி தரிசனம் செய்த நிலையில், அவருடன் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
கோவை மருதமலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் கரண் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர்சார்பில்  சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் கரண் தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளார். அதேபோல முன்னனி நடிகர் களான அஜித்குமார், விஜய், சூர்யா, பிரசாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து  பல்வேறு முக்கிய படங்களில் நடித்துள்ளார். மேலும், அவர்களுக்கு நிகரான கதாப்பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்று உள்ளார்.
இவர் நடித்த கண்ணெதிரே தோன்றினாள்,  திருநெல்வேலி, கருப்புசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், தற்போது  திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, கோவை மருதமலை முருகன் கோவில் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். நடிகர் கரண்னை பார்த்த உடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

Kerala Lottery Result
Tops