சங்க பணம் முறைகேடு விவகாரம் தொடர்பான நடவடிக்கை எடுத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், இனி விஷாலை வைத்து படம் இயக்க தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஷால், அவ்வப்போது தனது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான இவரின் ரத்னம் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இருந்து தற்போது வரை விஷால் செய்யும் ஒவ்வொரு செயலும் கடுமையாக விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, சங்கத்தின் நிதியை பொறுப்பற்ற முறையில் கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த தற்போது தயாரிப்பாளர் சங்கம் தனி குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விஷால் தலைமையில் இருந்தபோது, ரூ12 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த இழப்பு குறித்து விஷால் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தினால், விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு கட்டப்பாடுகளை விதித்து தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விஷால் நடிப்பில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசனை செய்த பிறகே, பட வேலைகளை தொடங்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிக்கையின் காரணமாக விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமா வட்டாரத்தில் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள நடிகர் விஷால், சங்கத்தின் வைப்புநிதியை செயற்குழு மற்றும் நிர்வாகிகள் குழுவினரின் அனுமதி பெற்றே, சங்க உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு மற்றும் பென்சன் ஆகியவற்றுக்கு பயன்படுத்தியதாக கூறியுள்ளார். வைப்புத்தொகையை பயன்படுத்தலாம் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்று சங்க நிர்வாகிகளிடம் கையெழுத்திட்ட பிறகே, நலத்திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டது என அவர் விளக்கமளித்தார்.
தமிழ் சினிமா வட்டாரத்தில் இது பெரும் அதிர்ச்சி நிலையில் பார்க்கத்தக்கது. விஷாலின் எதிர்காலத்தில் புதிய படங்கள் உருவாவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம். இது ஒரு நடிகராக அவரின் பெயருக்கும் மாறாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் சாதாரண மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வைத்து பார்க்கலாம், விஷால் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இடையேயான இந்த சர்ச்சை எங்கு போய் முடிகிறது என்பதை.