வர்ஷா பரத் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படமான பேட் கேர்ள் படத்திற்கு சமூகவலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த படம் சர்வதேச அளவில் விருது பெற்றுள்ள தகவல், இந்த படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Read In English: Varsha Bharath’s Bad Girl wins NETPAC Award at International Film Festival Rotterdam
இயக்குனர் வர்ஷா பரத்தின் முதல் படமான ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், ஒரு பெண்ணின் பாலியல் ஆசையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், சாதி அடிப்படையிலான ஸ்டீரியோடைப் செய்வதாக பலரும் கூறியதால், படத்தின் டீசர் பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து. ஆனாலும் இது வெறும் டீசர் மட்டுமு் தான். இதை வைத்து ஒரு முடிவுக்கு வர கூடாது என்று பலரும் கூறியிருந்தனர்.
அதே சமயம், இந்த படத்தை அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரால் வழங்கப்படுகிறது என்று டீசரில் கார்டு வெளியானதால், எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. ஆனாலும் தற்போது, பேட் கேர்ள் திரைப்படம், சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமில் உலகளாவிய அளவில் திரையிடப்பட்டு, படத்திற்கு எதிரான எதிர்ப்பு அலைகளை தனக்கு சாதகமாக மாற்றக்கூடிய ஒரு அரிய கௌரவத்தைப் பெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டு IFFR விழாவில் பேட் கேர்ள் NETPAC விருதை (ஆசிய சினிமாவை மேம்படுத்துவதற்கான வலையமைப்பு) வென்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அருண் கார்த்திக்கின் நாசிர் திரைப்படம் தான் கடைசியாக இந்த விருதை வென்றிருந்தது. அதேபோல், இந்த கௌரவத்தைப் பெற்ற பிற இந்தியப் படங்களில் மணி கவுலின் நௌகர் கி கமீஸ் (1999) மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின் விதேயன் (1995) ஆகிய படங்களும் அடங்கும். தற்போது அறிமுக இயக்குனர் வர்ஷா மற்றும் பேட் கேர்ள் குழுவினருக்கு இந்த விருது கிடைத்துள்ளது, சந்தேகத்திற்கு இடமின்றி மிகுந்த பெருமைக்குரிய தருணம்.
அஞ்சலி சிவராமன் முக்கிய வேடத்தில் நடிக்கும் பேட் கேர்ள் படத்தில், சாந்தி பிரியா, ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அமித் திரிவேதி தமிழில் அறிமுகமாகிறார்., மேலும் ராதா ஸ்ரீதர் எடிட்டிங் மற்றும் ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி மற்றும் பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பேட் கேர்ள் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
அதே சமயம், IFFR இல் அங்கீகாரம் பெறுவது விஷயங்களை நகர்த்தக்கூடும். ஆண்ட்ரியாவின் அனல் மேல பனி துளி உட்பட சில படங்கள் வெற்றிமாறன் ஆதரவு அளித்த படங்களின் சுவாரஸ்யமான வரிசையில் தற்போது பேட் கேர்ள் படமும் இணைந்துள்ளது.