kerala-logo

சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? அதிர்ச்சியில் ரசிகர்கள்


சினிமாவை விட்டு விலகப்போவதாக வெளியான தகவலையடுத்து கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காதலித்த ஆண்டனியை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் சினிமாவை விட்டு விலக போவதாக தகவல்கள் பரவி வருகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்தது இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகிய நிலையில் தற்போது அட்லி தயாரிப்பில் உருவான ‘பேபிஜான்’ என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்த 25-ம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணி வெடி’ ஆகிய படங்களிலும் கீர்த்தி நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 12-ந் தேதி கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான தொழிலதிபர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
திருமணத்தின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பகிரப்பட்டது. இந்நிலையில், சினிமாவை விட்டு விலக கீர்த்தி சுரேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனை கீர்த்தி சுரேஷ் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala Lottery Result
Tops