2017-ம் ஆண் முதல் ஒளிபரப்பான விஜய் டிவியின் முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு பாராட்டுக்கள் கிடைத்தது.
மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கு மேலும் பிரபலமானார்.
விஜய் டிவியின், சிங்கிள் பொண்ணுங்க, சூப்பர் சிங்கர், கே.பி.ஒய் காமெடி திருவிழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கெஸ்டாக பங்கேற்றார். விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளாக பங்கேற்று அசத்தினார்.
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான எஃப்ஏபி விருதை வென்றிருந்தாலும், அதன்பிறகு அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது.
