kerala-logo

சிறப்பு காட்சிக்கு அனுமதி: விடுதலை 2 படத்தில் கடைசி நேரத்தில் வெற்றிமாறன் செய்த மாற்றம்!


வெற்றிமாறன் சூரி விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெற்றிமாறனே கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகியள்ளது.
சூரி விஜய் சேதுபதி ஆகியோருடன், மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படம், டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் படத்தில் ஏற்கனவே வெளியான தினம் தினம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே விடுதலை 2 படம் நாளை (டிசம்பர் 20) வெளியாக உள்ள நிலையில், படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், விடுதலை 2 படம் இப்போதான் முடிந்தது. கடைசி நேரத்தில் படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இது ஒரு புதிய அனுபவம்.
இந்த பயணம் மிகப்பெரியதாக அமைந்துள்ளது. அனைவரின் பங்களிப்புடன் தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். ஏற்கனவே படத்தின் நீளம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் இருந்ததாகவும், தற்போது 8 நிமிடங்கள் குறைக்கப்பட்டதால், திரையரங்குகளில் வெளியாகும்போது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நீளம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நாளை (டிசம்பர் 20) வெளியாக உள்ள விடுதலை 2 படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக கால 11 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் நிலையில், தற்போது சிறப்பு காட்சி அனுமதியின் காரணமாக காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kerala Lottery Result
Tops