[வீட்டுக்கு வந்த கேரளா போலீஸ்.. பதறிய சூடாமணி, உண்மை உடைந்ததா? இல்லையா?
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு பூ முடி எடுக்கும் ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில் இன்று,
இசக்கிக்கு பூ முடி எடுக்க சூடாமணி தூரமாக மறைந்து பார்த்து சந்தோசப்படுகிறாள். அதன் பிறகு பாக்கியம், சௌந்தரபாண்டி காலிலும் வைகுண்டம் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, சூடாமணி வைகுண்டம் பக்கத்தில் நின்று ஆசிர்வாதம்
செய்வது போல் நினைத்து கொள்கிறாள்.
இதனை தொடர்ந்து, சண்முகம் குடும்பத்தினர் கிளம்பி வீட்டிற்கு வர போலீஸ் வெளியே காத்திருக்க கைதி என்ற
விஷயத்தை சொல்லிடுவாங்களோ என்று சூடாமணி பதறுகிறாள். ஆனால் சண்முகம் ஒருவழியாக பேசி சமாளித்து விடுகிறாள்.
அடுத்ததாக, வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார, சூடாமணி “எனக்கு வேண்டாம்” என்று சொல்கிறாள்.
வீட்டில் யாரையும் விட்டுட்டு சாப்பிட மாட்டோம் என்று கூப்பிட, இசக்கியின் தீபம் அணையாமல் காக்க முயற்சி செய்ததால்
கையில் காயமாக இருக்க, “நீங்க சாப்பிடுங்க” என்று எழுந்து சென்று விடுகிறாள்.
இசக்கிக்காக காயம் ஏற்படும் அளவிற்கு உதவி செய்த சூடாமணி மீது சண்முகத்தின் தங்கைகளின் பார்வை
நல்லவிதமாக மாறுகிறது. அதன் பிறகு பரணி சூடாமணிக்கு சாப்பாட்டு ஊட்டு விடுகிறாள். இரவு நேரம் ஆனதும் தூங்கி
கொண்டிருந்த சூடாமணி எழுந்து தண்ணீர் எடுக்க கை நீட்ட, ரத்னா தண்ணீரை எடுத்து கொடுத்து குடிக்க வைக்கிறாள். பிறகு சூடாமணியிடம் அம்மா குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர்.
.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கல்யாணத்திற்கு ஓகே சொன்ன மதுமிதா.. கௌதமுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதா கௌதம் கொண்டு வந்த மாப்பிள்ளைகளை நோ சொன்ன நிலையில் இன்று, கௌதமின் சித்தியும் மாமாவும் “எதுக்கு அங்க இங்கனு பொண்ணு தேடணும்? நாமளே கௌதமுக்கு கல்யாணம்
பண்ணி வச்சிடலாம். உன்னுடைய பேச்சை மட்டும் கேக்குற மாதிரி ஒரு பொண்ணை பார்த்து வச்சிடலாம்” என்றும் பேசுகின்றனர்.
இதனை தொடர்ந்து, ப்ரோக்கர் போன் செய்து மதுவை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் நாளைக்கு வருவதாக சொல்கின்றனர்.
மறுநாள் மதுவை ரெடி பண்ண மாப்பிள்ளை வீட்டாரும் வருகின்றனர். இருவருக்கும் ஒரே வயசு என்பதால் இந்த
சம்மந்தம் முடிந்து விடும் என்று யோசிக்கின்றனர். ஆனால் மது யோசித்து சொல்வதாக சொல்கிறாள்.
இங்கே மதுவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள மாயா ஆர்வமாக காத்திருக்க,
மதுவின் அம்மா சாப்பிட உட்காரும்போது “நீ கல்யாணம் பண்ணிட்டு போனா தானே மத்தவங்களுக்கு நல்லது
நடக்கும்” என்று திட்டுகிறாள். இதனால் மதுமிதா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.]