kerala-logo

சென்னையில் புதுவீடு வாங்கிய கே.பி.ஒய் சரத்; மனைவியுடன் வீட்டிற்குள் செல்லும் க்யூட் க்ளிக்ஸ்!


கேபிஒய் சரத் 12 வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த பணத்தில் சென்னையில் சொந்தமாக வீடு கட்டியுள்ளதாக புதுமனை புகுவிழா புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது சென்னையில் வீடு வாங்குவது. 12 வருடம் போராட்டத்திற்குப் பிறகு ஒரு இடத்தை எங்கள் வீடு என்று அழைக்கும் நாள் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி.. என்னுடன் உறுதுணையாக இருந்த என் துணை கிருத்திகா கிருஷ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி, லவ் யூ மா” என கேப்ஷன் போட்டு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து பிரபலமான கேபிஒய் சரத் தனது புதுமனை புகுவிழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

A post shared by Sarath_offl (@sarath_kpy)
சென்னையில் வீடு வாங்கும் தனது கனவு நிறைவேறிவிட்டது என கேபிஒய் சரத் பதிவிட்ட நிலையில், அவருக்கு நடிகை திவ்யா துரைசாமி, காமெடி நடிகர் தங்கதுரை உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த பதிவில் சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவும் வீட்டிற்குள் நுழைவது, பூஜையில் பங்கேற்பது, மாலை மாற்றுவது, பால் காய்ச்சுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சரத்தின் புதுமனை புகுவிழா புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.
சரத் கே.பி.ஒய் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்ததையடுத்து கணவன் மனைவியாக இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் சின்னத்திரை நிகழ்ச்சி சீசன் 3யில் கலந்துக்கொண்டு டைட்டிலை வென்றனர். அதற்கு பிறகு இந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் இருவரின் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

Kerala Lottery Result
Tops