kerala-logo

சென்னை டூ கோவா? ஆக்ஷனில் இறங்கிய ரஜினிகாந்த்; ஜெயிலர் 2 டீசர் வைரல்!


ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம், பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ள சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதற்கான டீசரையும் தற்போது வெளியிட்டள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆண்டு வெளியான படம் ஜெயிலர்.  மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தில், மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக கலக்கியிருந்தார். மேலும், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அனிருத் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் பின்னணி இசை என அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் வெற்றியை தொடந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ‘ஜெயிலர் 2’ படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதனால் ரஜிகிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஜெயிலர் படத்திற்கு பிறகு லால்சலாம், வேட்டையன் என இரு படங்களில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த படம் முடிந்து ரஜினிகாந்த் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
இதனிடையே பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில், முதல் பாகத்தில் நடித்த அனைவரும் நடிப்பார்கள் என்று எதிர்பார்ப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசரில், ரஜினிகாந்த் மட்டுமே இருக்கிறார், இயக்குனர் நெல்சனும், இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு கோவாவில் ஒரு பில்டிங்கில் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்போது அங்கு அதிரடியாக நுழையும் ரஜினிகாந்த், அனைவரையும் வெட்டி வீழ்த்துகிறார். அதன்பிறகு வெளியில் வரும் அவரை ஒரு கும்பல் ரவுண்ட் கட்ட, முதல் பாகத்தை போல், கண்ணாடியை காட்ட, ரஜினிகாந்தை சுற்றி வலைத்த கும்பல், வெடித்து சிதறுகிறது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Kerala Lottery Result
Tops