கண்ணதாசன் மது அருந்தியதை இயக்குனரிடம் போட்டுகொடுத்த எம்.எஸ்.வியை பார்த்து கண்ணதாசன் எழுதிய ஒரு ஹிட் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் என்ன? எந்த படம் என்பது தெரியுமா?
1950 தொடங்கி 70களின் இறுதிவரை தனது பாடல்கள் மூலம் பல அரிய தத்துவங்களை சொல்லிக்கொடுத்த கண்ணதாசன், நடிகர், பாடல் ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் வசனகர்த்தா, தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முக திறமை கொண்ட முக்கிய பிரபலங்களில் ஒருவர். சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்த மாதிரி மட்டுமல்லாமல் அவர்களுக்கு தனது எழுத்தின் மூலம் ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கண்ணதாசன் இணைந்தா உட்டுக்கே அந்த பாடல் ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அவ்வளவு புரிதலும் நெருக்கமும் இருந்தது. அதேபோல், இவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல், கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதும் ஒரு வழக்கம். அந்த வகையில், எம்.எஸ்.வி கோபப்பட்டதால் யாரும் எதிர்பாராத ஒரு ஹிட் பாடலையே கண்ணதாசன் கொடுத்துள்ளார்.
1962-ம் ஆண்டு, ஸ்ரீதர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம் ‘நெஞ்சில் ஓர் ஆலையம்’. ‘நெஞ்சில் ஓர் ஆலையம்’ படத்தில் முத்துராமன், தேவிகா இணைந்து நடித்தனர். நோயால் பாதிக்கப்பட்ட முத்துராமன் அவரது மனைவி தேவிகாவிடம், “நான் இறந்த பின் நீ மருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று சொல்வார். இந்த சுட்சிவேஷனுக்கு பாடல் எழுதுவதற்காகவும், இசையமைப்பதற்காகவும் எம்.எஸ்.வி மற்றும் கண்ணதாசன் இருவரும் பெங்களுரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
மதுபழக்கம் இருந்த கண்ணதாசன், முதல் நாள் இரவு குடித்துவிட்டு தனது தோழர், தோழிகளுடன் பாடலை போட்டு நடனமாடியுள்ளார். இதைப் பக்கத்து அறையில் இருந்த எம்.எஸ்.வி கேட்டு கண்ணதாசனிடம் வந்து, “கவிஞரே! காலையில் கம்போசிங் இருக்கின்றது. இப்போ இப்படி பண்ணா எப்படி?” என்று கண்டிக்க, கண்ணதாசன், “நீ போடா! காலையில் நான் டைமுக்கு வரலனா கேள்” என்று சொல்லிவிட்டு, எம்.எஸ்.வி தனது அறைக்கு சென்றார்.
இரவு 2 மணி ஆன பின், கண்ணதாசன், மது கோப்பையுடன் எம்.எஸ்.வி அறையில் வந்து அமர்ந்தார். இதைப் பார்த்த எம்.எஸ்.வி, “ஸ்ரீதருக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும்” என்று கேட்டார். “அவனுக்கு எப்படி தெரியும். நீ சொன்னால் தான் தெரியும். நீ போய் எதுவும் உளற வேண்டாம்” என்று கண்ணதாசன் கூறிவிட்டு தனது அறைக்கு சென்று தூங்கினார்.
.
மறுநாள் காலை 7 மணிக்கு எம்.எஸ்.வி கம்போசிங் வந்துவிட்டார். ஆனால், கண்ணதாசன் வரவில்லை. காலை 9 மணி ஆகியும் கண்ணதாசன் வராததால், கோபத்தில் ஸ்ரீதர் கொந்தளித்து, எம்.எஸ்.வி, முன்பு நடந்த நிகழ்வை அவரிடம் கூறினார். அப்போது, தனது அறையில் இருந்து வந்த கண்ணதாசன், “நான் ரெடி. நீங்கள் ரெடியா?” என்று கேட்டார். ஸ்ரீதர் கோபத்தில், “நாங்கள் 7 மணி கிடருந்தே ரெடி! காலையில் சீக்கிரம் இந்த பாடலை முடிக்க வேண்டும் என்று சொன்னோம், அப்போவும் நீங்கள் லேட்டா!” என்று சாடினார்.
இதற்கு கண்ணதாசன், “கொஞ்சம் தூங்கிவிட்டேன்” என்று கூற, ஸ்ரீதர், “நீங்கள் ராத்திரி முழுதும் தூங்கவே இல்லையாம்… கையில் பாட்டிலுடன் இருந்துள்ளீர்கள். அதெல்லாம் எனக்கு தெரியும்,” என்று பதில்கொடுத்தார். கண்ணதாசன் உடனடியாக எம்.எஸ்.வியை திரும்பி பார்த்தார். ஆனால் எம்.எஸ்.வி கண் மாறாமல் இருந்தார்.
சிறிது நேரத்தில் கம்போசிங் தொடங்கப்பட்டது. கண்ணதாசனிடம், “நீங்கள் பாட்டு எழுதுங்கள், அதற்கே நாள் இசைமைக்கிறேன்” என்று எம்.எஸ்.வி கூற, “நீ மெட்டை போடு, நான் பாட்டு எழுதுகிறேன்” என்று கண்ணதாசன் பதிலளித்தார். எம்.எஸ். வி மெட்டை அமைத்து வாசிக்க, கண்ணதாசன், “சொன்னது நீதானா” என்று பல்லவியை பாடினார்.
எம்.எஸ்.வி முகம் சுறுங்கினாலும், பணியைவிட்டால், “சொல் சொல் சொல் என் உயிரே” என்று கண்ணதாசன் கூறினார். இந்த வகையில், இரண்டு மணி நேரத்தில் அந்த பாட்டு கம்போசிங் முடிந்தது. ஆனால், எம்.எஸ்.வி முகத்தில் மகிழ்ச்சி இருந்தபோதே இல்லை.
இந்த நிகழ்வு பின்னர் முக்கியமாகப் பேசப்பட்டு, யாரும் எதிர்பாராத ஒரு ஹிட் பாடலாக, ரசிகர்களின் மனதில் வெற்றிகரமான பாடலாக ஆனது.