காணாமல் போன மகேஷ்.. கார்த்திக் சொன்ன வார்த்தை, சாமுண்டீஸ்வரி விட்ட சவால் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி ஆட்களால் மகேஷ் கடத்தப்பட கார்த்திக் அவனைத் தேடி சென்ற நிலையில் இன்று, கார்த்திக் பல்வேறு இடங்களில் மகேஷை தேடி அலைகிறான். கடைசியாக மண்டபத்திற்கு வந்த அவன் மகேசை காணவில்லை என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.
மறுபக்கம் மாயா எல்லாம் கைகூடி வர நேரத்துல இவன் எங்க போனான் என மகேஷை நினைத்து குழப்பம் அடைகிறாள். இதற்கிடையில் சிவனாண்டி என்னமோ உன் பொண்ணு கல்யாணத்தை நடத்தி காட்ட வேண்டும் சவால் விட்ட இப்ப என்ன ஆச்சு என கை தட்டி சிரிக்க சாமுண்டீஸ்வரி சொன்னபடி சொன்ன தேதியில் என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும் என சவால் விடுகிறாள்.
மகேஷ் காணாமல் போன வருத்தத்தால் ரேவதி அப்செட் ஆகி உள்ளே சென்றுவிட அவளது தோழிகள் ரேவதியை சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். அதைத்தொடர்ந்து சந்திரகலா கையில் மகேஷ் போன் கிடைக்க அதில் அவனும் மாயாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பார்க்க சந்திரா கலா இவர்களுக்கு இடையே இருக்கும் உறவைப் பற்றி அறிந்து கொள்கிறாள்.
அதோடு ஒரு குழந்தையை கூப்பிட்டு போனை கொடுத்து சிவனாண்டியிடம் கொண்டு போய் கொடுக்க சொல்கிறாள். மகேஷ் மாயா இடையே இருக்கும் உறவு குறித்து சிவனாண்டிக்கும் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மீண்டும் இசக்கியை தேடி வந்த முத்துப்பாண்டி.. சண்முகம் மீது கோபப்படும் பரணி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா, சீரியலின் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் கிளினிக் வந்து போனது குறித்து பரணி மற்றும் ஷண்முகம் இடையே வாக்குவாதம் உருவான நிலையில் இன்று, சண்முகம் நான் அப்போவே வெங்கடேஷ் ஏன் வந்தானு கேட்டு இருக்கனும். என்னுடைய தப்பு தான் என்று பரணியிடம் மன்னிப்பு கேட்க பரணி போடா நீ தான் நேர்மையா இல்ல என்று திட்டி விடுகிறாள்.
அடுத்த நாள் முத்துப்பாண்டி மீண்டும் முப்பிடாதியுடன் வந்து இசக்கியுடன் பேசி கொண்டிருக்க கனி இவனை பார்த்து கொடுத்த கடனை திருப்பி கேட்கிறாள். முத்துப்பாண்டி நாளைக்கு கண்டிப்பா கொடுத்துடுறேன் என்று சொல்கிறான். மீண்டும் இசக்கியுடன் பேசி கொண்டிருக்க இதை பார்த்த சண்முகம் திரும்ப எதுக்கு வந்த என்று கேட்க கடைனா நாலு பேர் வர தானே செய்வாங்க.. கலர் குடிக்க வந்தேன் என்று சொல்லி சண்முகத்தை ஆப் ஆக்குகிறான்.
முத்துப்பாண்டி கிளம்பி சென்றதும் வைகுண்டம், பரணி ஆகியோர் முத்துப்பாண்டி இசக்கியை தேடி வர ஆரம்பிச்சுட்டான். உன் பிடிவாதத்தால் தான் அவங்க ரெண்டு பேரும் சேராமல் இருக்காங்க என்று சொல்ல பரணியும் சண்முகம் மீது கோபித்து கொள்கிறாள். இதனால் சண்முகம் ஒரு பேஷண்ட் போல் கிளினிக்கிற்கு வந்து பரணியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
