தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் துனுஷ், சமீபத்தில் ராயன் படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார். செல்வராகவன், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சரவணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படம் தனுஷ் நடிப்பில் வெளியான 50-வது படமாகும்.
பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி கண்ட தனுஷ், தனது 2-வது படமான ராயன் படத்தை பெரிய வெற்றிப்படமாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து, குபேரா படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த படம் தனுஷ் இயக்கிய 3-வது படமாகும். அந்த வரிசையில் தற்போது தனுஷ் இட்லி கடை என்றபடத்தை இயக்கி நடித்து வருகிறார்.
#idlikadai release announcement pic.twitter.com/iNKNmfridz
தனுஷ் நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை, ஆகாஷ் பாஸ்கரன் என்பவருடன் இணைந்து தனுஷே தயாரித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தயில் எழுந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இட்லி கடை படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.