Vidamuyarchi day 1 Box office: கடந்த வியாழக்கிழமை அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும், இப்படம் வசூல் ரீதியாக நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளதாக இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இப்படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் ரூ. 22 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Vidaamuyarchi Box Office Collection Day 1: Ajith’s action-drama fall short of Thunivu’s opening day figures, grosses Rs 22 crore
இப்படம் தமிழில் 3,600 காட்சிகளும், தெலுங்கில் 800 காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளது. வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ. 28.6 கோடியும், இதே கூட்டணியில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘வலிமை’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 31.70 கோடியும் வசூலித்திருந்தது. ‘துணிவு’ திரைப்படம் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், மொத்த பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனாக ரூ. 250 கோடி வசூலித்தது எனக் கூறப்படுகிறது. மேலும், ‘வலிமை’ திரைப்படம் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 234 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரூ. 200 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இப்படத்தில், அர்ஜுன், திரிஷா, ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். நேற்றைய தினம் (பிப் 6) வெளியான இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைத் தொடர்ந்து, அஜித்குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.