தனது மகளின் நடிப்பு வாழ்க்கைக்காக, தான் பார்த்துக்கொண்டிருந்த சர்வதேச பள்ளியின், முதல்வர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு, தனது மகளின் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக நிற்கிறார் ஒரு தாய். அவர் யார்? அந்த நடிகை யார் என்பதை பார்ப்போமா?
தமிழ் சினிமாவில் பல மொழி நடிகைகள் அறிமுகமாகவதும், மாற்று மொழி நடிகைகளில் இங்கு முன்னணி நடிகையாக வலம் வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு நடிகை தான் உபசேனா ஆர்.சி. குஜராத்தின் வாதரோ பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், 1999-ம் ஆண்டு பிறந்துள்ளார். 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கலர்ஸ் இன் பெங்களூர் என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து 2018-ம் ஆண்டு வெளியாக என்பத்தெட்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டேனியல் பாலாஜி, ஜி.எம்.குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்து, நகுல் நடிப்பில் வெளியான பிரம்மா டாட் காம், எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த டிராபிக் ராமசாமி, கருத்துக்களை பதிவு செய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதில் டிராபிக் ராமசாமி சுமாரான வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு வெளியான லோக்கல் சரக்கு, ஒரு தவறு செய்தால் ஆகிய படங்களில் நடித்துள்ள உபசேனா ஆர்.சி, தற்போது எனை சுடும் பனி என்ற படத்தில் நடித்து வருகிறார். 2018-ம் ஆண்டு விஜய் டிவியின் வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று 2-வது இடம் பிடித்த உபசேனா ஆர்.சி, 2023-ம் ஆண்டு மெரா செய், சர்தா அவுர் சபுரி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதில் வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சி இவருக்கு சின்னத்திரையில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
A post shared by Upasana RC (@upasanarc)
உபாசனா ஆர்.சி நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக சர்வதேச பள்ளியில் முதல்வராக பணியாற்றிய அவரது அம்மா சைதாலி ராய் சவுத்ரி தனது முதல்வர் பதவியைள ராஜினாமா செய்துவிட்டு, மகளின் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருந்து வருகிறார். பி.எஸ்சி, பி.எட் மற்றும் எம்பிஏ பட்டங்கள் பெற்று நன்கு படிக்கக்கூடிய தொழில்முறை நிபுணர் ரான இவர், உபாசனாவின் நடிப்பு வாழ்க்கைக்கு, உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது சைதாலி, உபாசனாவின் தனிப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர், ஒப்பனையாளர் மற்றும் விமர்சகராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
