நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021ம் ஆண்டு பிரிந்துவிட்டார்கள். சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா.
சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்து வாழ்ந்தபோது இருவரும் கையில் ஒரே மாதிரியான டாட்டு போட்டிருந்தார்கள். டாட்டுவை காட்டியபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.
நாக சைதன்யாவின் பெயரை தன் உடம்பில் டாட்டு போட்டிருந்தார் சமந்தா. சைதன்யாவை பிரிந்த பிறகு அந்த டாட்டுவை நீக்கிவிட்டார். இந்நிலையில் கையில் இருக்கும் டாட்டுவையும் நீக்கத் துவங்கிவிட்டார் என பேசப்படுகிறது.
விவாகரத்துக்கு பின் தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு மையோசிடிஸ் எனும் வியாதி வந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள சினிமாவிலிருந்து விலகினார். ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர் சினிமாவுக்கு மீண்டும் வந்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. இதனை அடுத்து மறுபடியும் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. ராஜ்&டிகே இயக்கியிருந்த அந்த சீரிஸில் சமந்தாவின் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
சமந்தாவும் விரைவில் 2-வது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க சமந்தா இயக்குநர் ராஜை காதலிப்பதாகவும் ஒரு தகவல் அண்மையில் பரவியது. சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது காதல் பற்றிய போஸ்ட்டுகளை போட்டு வருகிறார்.
இந்நிலையில், சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அவர் காக்டெயில் குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவரது வலது கையில் குத்தியிருந்த டாட்டூவை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த டாட்டூ நாக சைதன்யாவை காதலித்தபோது போட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஒருவழியா சைதன்யாவை சமந்தா மொத்தமாக தூக்கி எறிய ஆரம்பித்துவிட்டார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.