kerala-logo

நோ மீன்ஸ் நோ தான்… மனைவியிடம் எல்லை மீறிய கணவனுக்கு அடி கொடுத்த போலீஸ்!


No Means No தான்.. வலுக்கட்டாயமாக ரத்னாவை நெருங்கிய வெங்கடேஷ், பாடம் புகட்டிய முத்துப்பாண்டி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா அறிவழகனுடன் வண்டியில் வந்து இறங்க வெங்கடேஷ் கடுப்பாகி அறிவழகன் சட்டையை பிடித்த நிலையில் இன்று, அறிவழகன் நான் ஒன்னும் ரதனாவை கட்டபயப்படுத்தி கூட்டிட்டு வரல. நீ என்கிட்டே சண்டை போடுறத விட்டுட்டு நல்ல புருஷனா நடந்துக்கோ என்று பதிலடி கொடுத்து கிளம்பி செல்கிறான்.
அடுத்ததாக வீரா மற்றும் சிவபாலன் ஆகியோர் பேசி கொண்டிருக்க வீரா கண்ணில் தூசி விழ சிவபாலன் ஊதி தூசியை எடுக்க முயற்சி செய்கிறான். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த சௌந்தரபாண்டி இதை பார்த்து இருவரும் முத்தம் கொடுப்பதாக தப்பாக நினைத்து நெஞ்சை பிடித்து உட்காருகிறார். இந்த சண்முகம் குடும்பத்துல இருந்து இன்னொருத்தி என் வீட்டு மருமகளா வந்துடுவா போலயே என்று பதறுகிறார்.
வீராவும் சிவபாலனும் சௌந்தரபாண்டி நெஞ்சை பிடித்து உட்கார்ந்ததை பார்த்து பதறுகின்றனர். தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றனர். இதையடுத்து ரத்னா தலைக்கு குளித்து தலையை துவட்டிய படி இருக்க வெங்கடேஷ் பின்பக்கமாக வந்து அவளை கட்டியணைத்து நெருங்க நினைக்க, முத்துப்பாண்டி வெங்கடேஷை அடித்து துவைக்கிறான். பொண்டாட்டியா இருந்தாலும் விருப்பம் இல்லாமல் கையை வைக்க கூடாது, நோ மீன்ஸ் நோ தான் என்று பாடம் புகட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காதலை சொன்ன கவின்.. சிவராமன் குடும்பத்தை இம்ப்ரெஸ் செய்த மகேஷ்.. அஞ்சலி வாழ்க்கையில் நடக்க போவது என்ன? கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியை பாலோ செய்து பஸ்ஸில் ஒய் பிங்க் கலர் புடவை என்று கூப்பிட்ட நிலையில் இன்று, துளசி திரும்பி பார்த்து என்ன என்று கோபப்பட என் அத்தை பொண்ணு கமலி மாதிரி இருந்தது, அதான் கூப்பிட்டேன் என்று சொல்லி சமாளிக்க துளசி அங்கிருந்த லேடி போலீஸ் ஒருவரிடம் அவன் என்கிட்ட வம்பு செய்கிறான் என்று மாட்டி விட்டு செல்கிறான்.
அடுத்து அந்த லேடி போலீஸ் தம்பி நீங்க எம்.எல்.ஏ பையன் தானே என்று சொல்லி கேட்க ஆமாம் அவங்க என் அத்தை பொண்ணு தான் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறான். அடுத்ததாக சிவராமன் மற்றும் லட்சுமி என இருவரும் மகேஷை பார்க்க வந்திருக்க அவன் எப்பவும் எல்லாருக்கும் உதவு செய்பவன் என புரிந்து கொள்கிறார்கள். மஹேஷும் அஞ்சலியை முதல் முறையா காலேஜில் தான் பார்த்தேன். ரொம்ப பிடித்து போச்சு. எனக்கு குடும்பம்னு யாரும் இல்ல. அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கும் உங்க குடும்பத்தோட சேர்ந்து வாழுற வாய்ப்பு கிடைக்கும் என சொல்கிறான்.
இந்த சமயத்தில் மகேஷை பார்த்து நன்றி சொல்ல 10 பேர் கம்பெனிக்கு வருகின்றனர். இதையெல்லாம் வைத்து சிவராமன், லக்ஷ்மிக்கு மகேஷ் பற்றி நல்ல புரிதல் உருவாகிறது. இதையடுத்து வீட்டிற்கு போய் பேசிட்டு நல்ல முடிவாக சொல்வதாக சொல்லி வருகின்றனர். மறுபக்கம் அஞ்சலி காலேஜில் லைப்ரரியில் உட்கார்ந்து பாட்டு கேட்டு கொண்டே எதையோ எழுதி கொண்டிருக்க அங்கு வந்த கவின் தனது மனதில் இருக்கும் காதலை சொல்கிறான்,  ஆனால் அஞ்சலி இதை எதுவும் கேட்காத நிலையில் போன் வந்ததும் வீட்டிற்கு கிளம்புகிறாள்.
கவின் நான் சொன்னதை கேட்டாயா என்று கேட்க அஞ்சலி அவசரத்தில் தலையாட்டி விட்டு கிளம்பி செல்கிறாள். அடுத்ததாக நைட் எல்லாரையும் கூட்ட பாலமுருகன் தட்டை தட்டி எல்லாரையும் கூப்பிடுகிறான். இதையடுத்து எல்லாரும் ஒன்று கூட மகேஷ் நல்ல பையனாக தான் இருக்காரு. எல்லாருக்கும் உதவி பன்றாரு என்று சொல்ல இதை கேட்டதும் ரகுராம் மற்றும் கேசவன் ஆகியோர் அப்போ உடனே கல்யாணத்தை வச்சிடலாம் என்று சொல்கின்றனர்.
அஞ்சலி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டாங்களா என்று புலம்ப துளசி இரு பேசிக்கலாம் என்று சொல்கிறாள். பிறகு பாட்டி இன்னொரு முறை நல்லா விசாரிங்க என்று சொல்ல ரகுராம், கேசவன் ஆகியோர் நாங்க போய் விசாரிக்கிறோம் என்று சொல்கின்றனர்.  நைட் துளசி தூங்காமல் தியாவை பற்றி யோசித்தபடி இருக்க மறுபக்கம் தியா யாருக்கும் தெரியாமல் ஜெகன் போனில் இருந்து எல்லா உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க மா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று இங்கு நடப்பதை வாய்ஸ் மெஸேஜ் அனுப்ப துளசி இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.  உடனே தியாவை கூட்டிட்டு வந்துடுறேன் என்று கிளம்ப அஞ்சலி இப்போ நீ போய் தியாவை பார்த்தல் அது அவளுக்கு தான் பிரச்சனையாகும் என்று சொல்கிறாள்
மேலும், லீகலாக இதை டீல் பண்ணிக்கலாம் என சமாதானம் செய்கிறாள். அடுத்த நாள் காலையில் கேசவன் இன்டெர்வியூவுக்கு வருவது போல் மகேஷ் கம்பெனிக்கு வந்து போனில் மகேஷ் பற்றி மரியாதை இல்லாமல் பேசுகிறான். இதை பார்த்து வேலை செய்பவர்கள் எல்லாரும் அவனை அடிக்க வருகின்றனர். அடுத்து டீ கடையில் ரகுராம் உங்க பாஸ் எப்படி என மகேஷ் ஆபிசில் வேலை செய்பவர்களிடம் விசாரிக்க அவர்களும் நல்ல விதமாக சொல்கின்றனர். அடுத்து சிவராமன் மகேஷ் வளர்ந்த சர்ச் பாதரிடம் விசாரிக்க அவரும் மகேஷ் நல்ல பையன் என பேசுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உண்மை அறிந்து உடைந்து போகும் ராஜராஜன்.. கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் இந்த ஊரிலேயே இருக்க கூடாது என பஞ்சாயத்தில் தீர்ப்பு சொன்ன நிலையில் இன்று, வீட்டுக்கு வந்தது ராஜராஜன் கார்த்தியை வெளியே போக சொல்கிறார். அவர் யாருனு தெரிந்தா இப்படி சொல்லுவீங்களா என்று மயில் வாகனம் உண்மையை சொல்ல போக கார்த்திக் தடுத்து விடுகிறான். அடுத்ததாக சாமுண்டீஸ்வரி சாப்பிட உட்கார மயில் வாகனம் அத்தை நீங்க இப்படி செய்திருக்க கூடாது.
ட்ரைவர் எத்தனையோ நாள் இந்த வீட்டில் இருந்து இருக்கான். அவன் ஒருமுறையாவது நம்ம பொண்ணுகிட்ட இப்படி நடந்து இருக்கானா? தப்பா ஒரு பார்வையாவது பார்த்து இருப்பானா என்று கேள்வி கேட்கிறான். பிறகு ராஜராஜன் தனியாக இருக்கும் போது அங்கு வரும் மயில்வாகனம் அந்த ட்ரைவர் தம்பி யார் தெரியுமா? உங்க தங்கச்சி அபிராமியோட பையன். ராஜா சேதுபதி ஊர்ல கோவில் கும்பாபிஷேகத்தை உங்க கையால் நடத்தி வைக்கணும்.. இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்கணும் என்பதற்காக தான் இங்க வந்திருக்காரு என்ற விஷயத்தை உடைக்கிறான்.
இந்த விஷயம் அறிந்ததும் ராஜராஜன் என் தங்கச்சி பையனா? இந்த சொத்துக்கெல்லாம் சொந்த காரனா? என் மருமகன் அவன். அவனை இப்பவே பார்க்கணும் என வருத்தப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Kerala Lottery Result
Tops