காஞ்சனா சீரிஸ் படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அடுத்து காஞ்சனா படத்தின் 4-வது பாகத்தை இயக்கிய வரும் நிலையில், இந்த படத்தில் சீரியல் நடிகை இணைந்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் முனி. ராஜ்கிரன் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து 2011-ம் ஆண்டு முனி 2 காஞ்சனா என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் லாரன்ஸ். சரத்குமார் திருநங்கையாக முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படமும் பெரிய வெற்றியை கொடுத்தது.
அதன்பிறகு, 2015-ம் ஆண்டு காஞ்சனா 2, 2019-ம் ஆண்டு காஞ்சனா 3 என வரிசையாக இயக்கி வெற்றி கண்ட லாரன்ஸ், தற்போது காஞ்சனா படத்தின் 4-வது பாகத்தை இயக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கோல்ட் மைன்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 90-100 பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும், பாலிவுட் நடிகை நோரா பதேகியும் நாயகியாக நடித்துவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல சீரியல் நடிகை ஹீமா பிந்து கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, சின்னத்திரையில் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த ஹீமா பிந்து அதனைத் தொடர்ந்து இலக்கியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். தற்போது இவர், காஞ்சனா 4 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காஞ்சனா 3 படத்தில், பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், தற்போது காஞ்சனா 4-வது பாகத்தில் ஹீமா பிந்து முக்கிய கேரக்டரில் கமிட் ஆகியுள்ளார்.