kerala-logo

பாயும் நெருப்பே… பாதாள நெருப்பே… சூர்யா பிறந்தநாளில் ட்ரீட் கொடுத்த கங்குவா படக்குழு!


சிறுத்தை, வீரம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சிவா கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் தமிழில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பீரியட் மற்றும் தற்காலத்தில் நடைபெறும் காட்சிகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படம், அதன் அறிவிப்பு முதல் தற்போது வரை வெளியாகி வரும் அனைத்து அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிறச்செய்துள்ளது. ரசிகர்கள் இதுவரை பார்த்திராத கதை அம்சம் கொண்டதாக இந்த படம் வெளிவரும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீஸ் ஆகுவதையொட்டி முதல் பாடல், டீசர் மற்றும் ட்ரெய்லர் காட்சிகளுக்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வி.எஃப்.எக்ஸ். காட்சிகள் இந்த படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்பதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே கங்குவா படத்தில் நடிகர் கார்த்தியும் நடிக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி மற்றும் சூர்யாவுக்கு இடையே சண்டை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Get ₹99!

. இந்த காட்சி படத்தின் இரண்டாவது பாகத்திற்கு லீடாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் (Fire Song) என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே, மாய நெருப்பே மலை நெருப்பே… பாயும் நெருப்பே, பாதாள நெருப்பே, காவல் நெருப்பே, காட்டு நெருப்பே… என உடுக்கு முழக்கத்துடன் ஒலிக்கிறது.

இந்தப் பாடலுக்கு ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருது வரை சென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்‌ஷித் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து பட்டையை கிளப்பியுள்ளார்.

முன்னதாக சூர்யாவின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா 44 படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு காதல், ஒரு சிரிப்பு, ஒரு யுத்தம் என்ற வரிகள் தொடங்கும் அந்த கிளிம்ஸ் வீடியோவில், 80-களின் வில்லன் போல பெரிய மீசையும், ஃபங்க் ஹேர்ஸ்டைலும் சூர்யா மாஸாக இருக்கிறார். இதில், சூர்யா புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்று இருப்பதால், அது குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது

Kerala Lottery Result
Tops