kerala-logo

மகன் சூர்யாவின் படத்தை சொந்த ஊரில் நண்பர்களுடன் கண்டு களித்த நடிகர் சிவகுமார்


நடிகர் சிவக்குமார் தனது மகன் சூர்யா நடித் கங்குவா திரைப்படத்தை, கோவை அவிநாசி சாலையில் உள்ள திரையரங்கில் நண்பர்கள் மற்றும் சொந்த ஊர் மக்களோடு மக்களாக அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.
நடிகர் சிவக்குமார் சொந்த ஊரான கோயமுத்தூரில் பால்ய நண்பர்களுடன் சேர்ந்து அவிநாசி சாலையில் விமான நிலையம் அடுத்த “பிராட்வே திரையரங்கில் “ஏப்பிக் ஸ்கிரீனில் 3″டியில் சொந்த ஊர் மக்களோடு மக்களாக அமர்ந்து தனது மகன் சூர்யா நடித்த கங்குவா படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.
கங்குவா திரைப்படம் பார்த்த பின்பு படம் குறித்து பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும்  உணர்ந்ததாக –  பிராட்வே திரையரங்கு உரிமையாளர்களான சதீஷ்குமார் – தேஜல் சதீஷ் மற்றும் நேகா சதீஷிடம் நடிகர் சிவக்குமார் மகிழ்வுடன் தெரிவித்து சென்றதாகக் கூறினார்.
மேலும், தான் கடைசியாக 3″டி”யில் பார்த்த படம் “மைடியர்* குட்டிச்சாத்தான் என்றும் அதன் பிறகு, தான் பிறந்த ஊரில் பிரம்மாண்ட பிராட்வே  திரையரங்கை அமைத்து அதில் தனது மகனின் படத்தை தொழில்நுட்பத்தை மேலோங்கி எப்பிக் ஸ்கிரீனில் 3″டி”இல் பார்த்தது சொந்த ஊருக்கான பெருமையும் மகிழ்வையும்  தருவதாக நடிகர்  சிவக்குமார் தகவல் தெரிவித்தார்.

Kerala Lottery Result
Tops