சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா தமிழ் சினிமா இயக்குநரான விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர், உலகம் என 2 குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் அவ்வப்போது கோவில் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக விஷேச நாட்களில் கோவில் சென்று வருவர். அந்த வகையில் பொங்கல் பண்டிகை, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு இன்று சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் நயன்தாரா மனமுருகி சாமி தரிசனம் செய்தார்.
நன்றி: தந்தி டி.வி
சுவாமி தரிசனம் சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்மனமுருகி ஐயப்பனிடம் வேண்டிய நயன்தாரா#ThanthiTV #Nayanthara #vigneshshivan pic.twitter.com/eztNDnK1KI
