kerala-logo

மணமகளின் சகோதரி… அழகில் மயக்கும் சாய் பல்லவி: ரீசன்ட் க்ளிக்ஸ் வைரல்!


தமிழில் கஸ்தூரிமான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாய் பல்லவி.
2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாளப்படம் சாய் பல்லவிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. பிரேமம் படத்தில் அவர் நடித்த மலர் கேரக்டர் கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகையாக மட்டுமல்லாமல் பிரேமம் படத்தில் ஒரு நடன இயக்குனராகவும் சாய் பல்லவி பணியாற்றி இருந்தார்.நடனத்தில் அதீத ஈடுபாடு கொண்ட சாய் பல்லவி, நடன தளத்தை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்.
நடனத்தில் அவர் முறையாக பயிற்சி பெறவில்லை என்றாலும் கூட, ஒரு கைதேர்ந்த நடன கலைஞர் போல அசத்தக்கூடியவர் சாய் பல்லவி.
ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீனில் அவரது அவரது நடனத்திறன் வித்தியமாக இருக்கும். தனது தாயை தனது நடன குருவாகக் கருதுவதாக முன்பு கூறியிருந்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் தோன்றினார். சாய் பல்லவி, 2009-ம் ஆண்டு தெலுங்கில் இ.டிவியின் அன்லிமிட்டெட் டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார்.
தமிழில் தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சாய் பல்லவி சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சேலையில் அசத்தலாக இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kerala Lottery Result
Tops