புலம்பி சிக்கிக் கொண்ட அஞ்சலி.. வெற்றியிடம் உதவி கேட்கும் துளசி – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம்.சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் அஞ்சலி என இருவருக்கும் நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் இன்று,நிச்சயம் நடந்து முடிந்ததும் லட்சுமி சோகமாக இருக்க சிவராமன் என்னாச்சு என கேட்கிறார். அஞ்சலி கல்யாணம் ஆகி போயிட்டதும் அவ வீட்ல தனியா தான் இருப்பா மாப்பிள்ளைக்கு வேற சொந்தம் யாரும் இல்ல அவர் வேற பெரிய பிசினஸ்மேன் என்று கவலைப்படுகிறாள்.
இதை கேட்ட துளசி அதுக்கு என்னம்மா தினமும் வீடியோ கால்ல பேசிக்கலாம் என ஆறுதல் சொல்கிறாள். இதைத் தொடர்ந்து ரகுராம் மற்றும் கேசவன் என இருவரும் மாப்பிள்ளை பெரிய இடமாக இருக்காரு அவர வச்சு செட்டில் ஆகிவிட வேண்டும் என திட்டம் போடுகின்றனர். ரகுராம் முதலில் அவரது சொத்துக்கள் பாதியை அஞ்சலி பெயரில் எழுத வைத்து அதில் பங்கு கேட்க வேண்டும் என திட்டம் போடுகிறான்.
மறுபக்கம் எம்எல்ஏ வீட்டில் வெற்றியின் அம்மா வெற்றிக்கு கல்யாணம் செய்யலாம் என பேச்சு எடுக்க கல்யாணத்தை பெரிய அளவில் செய்து விளம்பரம் தேடலாம் என திட்டம் போடுகிறார் எம்.எல்.ஏ. வெற்றி வந்ததும் அவனது நண்பர்கள் இந்த விஷயத்தை சொல்ல வெற்றி ஷாக் ஆகுகிறான். அடுத்த நாள் தனக்கு பிறந்தநாள் என்பதால் அஞ்சலி மகேஷ் தனக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லல என புலம்பியபடி இருக்கிறாள்.
இந்த சமயத்தில் மகேஷ் வீட்டுக்கு வர இது தெரியாமல் அஞ்சலி மகேஷ் என்ன பிரைவேட் ஜெட்ல கூட்டிட்டு போய் கடலுக்கு நடுவே கட் பண்ணி சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா ஒரு வாழ்த்து கூட சொல்லல என பேசியபடி வெளியே வந்து மகேஷை பார்த்து ரூமுக்குள் ஓடி விடுகிறாள். இதையடுத்து மகேஷ் லட்சுமியிடம் அஞ்சலியை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி கேட்க லட்சுமி எல்லோரிடமும் பேசிவிட்டு அனுமதி கொடுக்கிறாள்.
கவினின் அப்பா வரதராஜன் தன்னுடைய வீட்டில் வேலை செய்பவனை துப்பாக்கியால் சுடப் போக கவின் என்னாச்சு என தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கிறான். என்னோட பையன் யாரையும் காதலிச்சு இழுத்துட்டு போயிட்டான் என்று சொல்லி கோபப்படுகிறார். காதலால இந்த குடும்பம் பிரிஞ்சது உனக்கு தெரியும் தானே என்று ஆவேசப்பட கவின் அப்பா காதலை எவ்வளவு வெறுக்கிறார் என்பதை தெரிந்து கொள்கிறான்.
அடுத்து துளசி தியாவை பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த் வீட்டிற்கு வருகிறாள். செக்யூரிட்டி துளசியை உள்ளே விட மறுக்கிறார். இதனால் துளசி எப்படி வீட்டுக்குள் செல்வது என தெரியாமல் தவிக்க அந்த வழியாக வரும் வெற்றி துளசியை பார்த்து என்ன மேடம் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்கிறான். முதலில் முகம் கொடுத்து பேசாத துளசி பிறகு எனக்கு இந்த வீட்டுக்குள்ள போகணும் உன்னால முடியுமா என்று கேட்கிறாள்.
வெற்றி பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஈபி ஆட்களிடம் ஏணியை வாங்கி அதன் மூலமாக துளசியை உள்ளே அனுப்பி வைக்கிறான். தியா நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வெயிட்டான பொருட்களை தூக்கி கொண்டு செல்வதை பார்த்து கண் கலங்குகிறாள். துளசியை பார்த்ததியா சாப்பாடு கூட கொடுக்காமல் அடித்து துன்புறுத்துவதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ட்ரோனை வைத்து குழந்தையை காப்பாற்றிய ஷண்முகம்.. பரணிக்கு வந்த அமெரிக்கா அழைப்பு – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி மற்றும் ஷண்முகம் குழந்தையின் உயிரை காப்பாற்ற மதுரைக்கு சென்ற இடத்தில பாலம் உடைந்து ஆளுக்கு ஒரு பக்கம் அவதிப்பட்ட நிலையில் இன்று, ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் செல்ல முடியாமல் தவிக்கும் நிலையில் சண்முகம் நீ தான் எப்படியாவது ஒரு வழியை காட்டணும் என வேண்டுகிறான்.
உடனே ஒரு ட்ரோன் கேமரா பறந்து வருகிறது. சண்முகம் அதை ஆபரேட் செய்பவனிடம் சென்று இந்த பயன்படுத்தி ஒரு மருந்தை இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் அனுப்ப முடியுமா? ஒரு குழந்தையோட உயிரை காப்பாற்ற முடியுமா என்று கேட்கிறான். அந்த ட்ரான் ஆப்ரேட்டரும் சம்மதம் சொல்கிறார். உடனே சண்முகம் பரணிக்கு போன் செய்து நீ ட்ரீட்மெண்ட்டை ஸ்டார்ட் பண்ணு, மருந்து உன்னை தேடி வரும் என்று சொல்ல பரணி சிகிச்சையை ஆரம்பிக்கிறாள்.
அடுத்து கார் மதுரையில் ஓரிடத்தில் நின்று கொண்டிருப்பதை GPS மூலமாக கவனிக்கும் முத்துப்பாண்டி சம்பவ இடத்திற்கு குழந்தையின் பெற்றோருடன் வருகிறான், பரணியை பார்த்ததும் இது என் தங்கச்சி என சொல்கிறான். குழந்தைக்கு காரில் ட்ரீட்மென்ட் நடப்பதை பார்த்த பெற்றோர் என் குழந்தைக்கு என்ன பிரச்சனைனு தெரியுமா? நான் பார்க்காத ஹாஸ்ப்பிடலா? அங்கே எல்லாம் சரி செய்ய முடியாததையா நீங்க எந்த வசதியும் இல்லாமல் இந்த காரில் வைத்து சரி செய்ய போறீங்க என்று ஆவேசப்படுகின்றனர்.
பரணி உங்க குழந்தையை நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்லியும் ஏற்க மறுக்கின்றனர், பேமிலி டாக்டருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல பரணி போனை வாங்கி கொடுக்கும் ட்ரீட்மெண்ட் குறித்து சொல்கிறாள். டாக்டர், சபாஷ் இப்போதைக்கு அந்த ட்ரீட்மெண்ட் தான் சரியா இருக்கும். உங்க திறமைக்கு நீங்க அமெரிக்காவில் இருக்கனும் என பாராட்டுகிறார்.
டாக்டர் சொன்னதை கேட்டு குழந்தையின் பெற்றோரும் பரணியின் திறமையை புரிந்து கொண்டு நன்றி சொல்கின்றனர். நீங்க அமெரிக்காவிற்கு வாங்க, உங்க படிப்பு செலவு முழுவதையும் நாங்க ஏற்று கொள்கிறோம் என்று சொல்ல சௌந்தரபாண்டி சந்தோசப்படா சண்முகம் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பரமேஸ்வரி பாட்டி விட்ட சவால்.. பரிதவிக்கும் ரேவதி, கல்யாணத்தில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரியை பார்த்ததும் நீங்க எதுக்கு வந்தீங்க என கோபப்படுகிறாள். இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்து ராஜராஜன் ஏற்கனவே பரமேஸ்வரி பாட்டியிடம் தனியாக வரவேண்டாம் என்று சொல்லி இருந்தார்.
இதனால் பாட்டி ஊர்காரர்களுடன் வந்திருக்க அவர்கள் பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க என சத்தம் போடுகின்றனர். பரமேஸ்வரி பாட்டி எங்க மேல தப்பு இருந்ததால் இத்தனை வருஷமா நாங்க தள்ளி இருந்தோம். இனிமேலும் அப்படி இருக்க முடியாது, எங்களுக்கு ஏதாவது ஆனால் கூட எங்க பையன் வருவானா? இறுதி சடங்கை எல்லாம் செய்வானானு தெரியல. பிரிந்த குடும்பம் திரும்பவும் ஒன்னு சேரனும் அதுக்கு தான் என் பேரனுக்கு என் பேத்தியை கேட்டு வந்திருக்கேன் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி உட்பட எல்லாரும் ஷாக் ஆகின்றனர்.
அவளுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிருச்சு, அதுவும் இல்லாமல் என் பொண்ணை எல்லாம் கொடுக்க முடியாது என சாமுண்டேஸ்வரி கொதிக்கிறாள். மேலும் பாட்டி இவ்வளவு நாளா எங்களுக்கு தண்டனை கொடுத்தது போதும் என் பேர பசங்களுக்கும் அப்பா வழி உறவை பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல அவங்களை தண்டிக்காதே என்று சொல்கிறாள். அவங்களுக்கு அந்த ஆசையெல்லாம் இல்ல என்று சாமுண்டேஸ்வரி சொல்ல அதை நீ சொல்லாத என பேரப்பிள்ளைகள் சொல்லட்டும் என்று சொல்கிறார் பாட்டி, இதனால் இன்னும் கோபமாகும் சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை கொண்டு வந்து நீட்ட பரமேஸ்வரி பாட்டி இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று பதிலடி கொடுக்கிறார்.
என் பேரனுக்கும் பேத்திக்கும் தான் கல்யாணம் நடக்கும். உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ என சவால் விட்டு வெளியே கிளம்புகிறாள். அடுத்து கார்த்திக் பரமேஸ்வரி பாட்டியை கோவிலில் சந்தித்து எதுக்கு இப்படியெல்லாம் செய்யறீங்க பாட்டி என கேட்கிறான். ராஜராஜன் நான் தான் அம்மாவை வர சொல்லி இருந்தேன். எல்லாம் இந்த குடும்பம் ஒன்னு சேர தான் என்று சொல்ல கார்த்திக் என்ன மாமா எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாமா என கேள்வி கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
