kerala-logo

மலையாளப் படங்களில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் – சூர்யா சொன்ன பகத் பாசில் கேரக்டர்!


இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். கங்குவா படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய அளவு பொருட் செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. கங்குவா படம் நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழுவினர் தொடர்ந்து புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கங்குவா படத்தின் ஹீரோ சூர்யா அளித்த நேர்காணல் ஒன்றில், சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களில் உள்ள எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் சூர்யா, ‘ஆவேசம்’ படத்தில் வரும் பகத் பாசிலின் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறினார்.
மேலும், “எனக்கு அந்த காதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. படத்தை இயக்கிய விதம் சிறப்பாக இருந்தது. பகத்பாசில் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்” என்று சூர்யா கூறினார்.
உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் நவம்பர் 13-ம் தேதிக்குள் ரூ. 20 கோடியை செலுத்தாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Kerala Lottery Result
Tops