kerala-logo

மாஸ் ரீ-என்ட்ரி… 2024ல் அதிக சம்பளம் பெற்ற நடிகை இவர் தான்!


2024-ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், டாப் 10 படங்கள், உள்ளிட்ட பல்வெறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் யார் என்பதை பார்ப்போமா?
இந்திய சினிமாவில், ஒவ்வொரு ஆண்டும் 1000-க்கு மேற்பட்ட படங்கள் வெளியாகி வருகிறது. இதில் அவ்வப்போது புது நடிகைகள் அறிமுகம் அவர், முன்னணி நடிகைகள் நடிப்பில் 2-3 படங்கள் வெளியாவது வழக்கமாகி வருகிறது. இதில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணி நடிகைகளே அதிகம் இடம் பிடிப்பார்கள். அந்த வகையில், 2024-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய முன்னணி நடிகை யார் தெரியுமா?
திரைத்தறையில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை கடந்து இன்றும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தான் 2024-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார். 1999-ம் ஆண்டு பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு 3-வருட இடைவெளிக்கு பிறகு, அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
த்ரிஷா திரையுலகில் அறிமுகமானதை வைத்து பார்த்தால், தற்போது அவர் சினிமாவில் கால் நூற்றாண்டை கடந்துள்ளார். இடையில் சில படங்களின் தோல்வியால் மார்க்கெட்டை பறிகொடுத்த த்ரிஷா, விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை மீண்டும் வலுப்படுத்திக்கொண்டார். அதன்பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அசத்திய அவர். அடுத்து விஜயுடன் லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான விஜயின் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடியிருந்தார்.
தற்போது, அஜித்துடன் குட் பேட் அக்லி, விடா முயற்சி ஆகிய படங்களில் நடித்து வரும் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரின் 45-வது படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்திலும் த்ரிஷா தான் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக த்ரிஷா 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்றால் அவர் த்ரிஷாதான்.

Kerala Lottery Result
Tops