kerala-logo

மீண்டும் ஆகாஷ் – இனியா சந்திப்பு: உச்சக்கட்ட கோபத்தில் கோபி; பாக்யா வைத்த ட்விஸ்ட்!


விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் காதல் விவகாரம் பாக்யா வீட்டுக்கு தெரியவந்ததால் பெரிய பிரச்னை எழுந்துள்ள நிலையில், இனியா யாரையும் மதிக்காமல் போலீஸ்க்கு தகவல் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், எழில் உட்கார்ந்திருக்க, அங்கு வரும் இனியா, ஆகாஷ்க்கு எக்ஸாம் என்று தெரிந்துகொண்டு, எழிலிடம் போன் கேட்கிறாள். அவன் அமைதியாக இருக்க, சரி வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பூஜை ரூமுக்கு சென்று ஆகாஷ் நல்லா எக்ஸாம் எழுத வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாள். அதன்பிறகு எழில் இனியாவிடம் வா வெளியில் போய்விட்டு வரலாம் என்று அழைத்து செல்கிறான்
நேராக ஆகாஷ் வீட்டுக்கு செல்ல, நான் அம்மாவிடம் அவனை பார்க்க மாட்டேன் பேச மாட்டேன் என்று சொல்லியிருக்கேன் என்று இனியா சொல்ல நீ விஷ் பண்ணணும்னு ஆசைப்பட்ட விஷ் பண்ணு. முதலில் நான் உள்ளே போகிறேன். அதன்பிறகு நீ வா என்று சொல்லிவிட்டு எழில் உள்ளே போகிறான் எழிலை பார்த்தவுடன், ஆகாஷ் சிரிக்க, இனியா உனக்கு விஷ் பண்ண சொன்ன, என்று எழில் சொல்ல, நான் தேங்கஸ் சொன்னேன்னு சொல்லுங்க என்று ஆனாஷ் சொல்கிறான்.
இதை கேட்ட எழில்,நீயே சொல்லிடு என்று சொல்ல இனியா என்ட்ரி ஆகிறாள். அவள் ஆல்தி பெஸ்ட் சொல்லிவிட்டு நலம் விசாரித்துவிட்டு வெளியில் வர, அப்போது ஆகாஷின் அப்பா வந்து இனியாவை திட்ட, எழிலையும் திட்டுகிறார். ஆனாஷ் அவனது அப்பாவை சமாதானம் செய்துவிட்டு இனியாவையும், எழிலையும் அனுப்பி வைக்கிறான். இந்த பக்கம், செல்வியிடம் ஆகாஷ்க்கு எக்ஸாம் நீ விட்டிலே இருக்கலாமே என்று பாக்யா சொல்ல, அவனே அவனை பார்த்துக்கொள்வான் அக்கா என்று சொல்வி சொல்ல, இனியா எழில் வருகின்றனர்.
இனியா, ஆகாஷ் வீட்டுக்கு போனதற்காக சாரி சொல்ல, நீ விஷ் பண்ண தானே போக பரவாயில்லை என்று பாக்யா சொல்கிறாள். அதன்பிறகு, ஈஸ்வரியும் கோபியும் வீட்டில் தனியாக இருக்கும்போது, அங்கு வரும் ஆகாஷின் அப்பா, என் பையன் உங்க பொண்ண லவ் பண்ணதுக்காக அவனை அடிச்சீங்க, இப்போ உங்க பொண்ணு என் பையனை தேடி என் வீட்டுக்கே வருகிறாள். இதுதான் நீங்கள் வளர்த்த லட்சனமா என்று கேட்க, கோபியும் ஈஸ்வரியும் தலைகுணிந்து நிற்கின்றனர்.
அப்போது அங்கு வரும் செழியன், ஜெனி அமிர்தாவிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க, அந்த நேரத்தில் பாக்யா, எழில், இனியா மூவரும் வீட்டுக்கு வர, கோபி எங்கு போய்விட்டு வர என்று கேட்க, ரெஸ்டாரண்ட்க்கு என்று இனியா சொல்ல, கோபி கோபமாகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Kerala Lottery Result
Tops