kerala-logo

மீண்டும் மயங்கிய கோபி: இனியாவுக்கு விழுந்த பளார்; எல்லாத்துக்கும் காரணம் ராதிகா தான்!


விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தனது முன்னாள் கணவன் கோபியை மருத்துவமனையில் சேர்த்து பாக்யா காப்பாற்றிய நிலையில், அவரது அம்மா, ஈஸ்வரி, கோபியை மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார். அதன் காரணமாக கோபியின் 2-வது மனைவி ராதிகாவை கோபியை நெருக்க விடாமல் தடுக்கிறார். அதே சமயம் பாக்யா, மீது வெறுப்பில் இருந்த கோபி இப்போது அவளிடம் அன்பாக நடந்துகொள்கிறான்.
இதனிடையே மருத்துவமனையில் இருந்து கோபி, ராதிகா வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் என்று, பாக்யா விரும்ப, ஈஸ்வரி தன்னுடன் அழைத்து செல்ல முயற்சிக்க, கோபியும் அம்மா பேச்சை கேட்டு, பாக்யாவீட்டுக்கு சென்றுவிடுகிறான். இதனால் அதிர்ச்சியான ராதிகா, பாக்யா வீட்டுக்கு சென்று கோபியை பார்த்து வருகிறாள். ஆனால் ஈஸ்வரி ஒவ்வொருமுறையும் நீ இனிமேல் இங்கு வர கூடாது கோபியை நிம்மதியாக இருக்க விடு என்று சொல்லி அனுப்புகிறாள்.
இதில் நேற்றைய எபிசோட்டில், கோபியை பார்க்க வந்த ராதிகா நாளைக்கு மயூ பிறந்த நாள் என்று சொல்ல, கோபியும் நாளை வீட்டுக்கு வருவதாக சொல்ல, அருகில் இருந்த பாக்யாவின் மகள் இனியா, இனிமேல் உங்களை அங்கு அனுப்ப முடியாது என்று சொல்கிறாள். இதனால் ராதிகா அதிர்ச்சியாக அத்துடன் எபிசோடு முடிந்தது. இதனிடையே அடுத்து வரும் இரு தினங்கள் எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் இனியாவின் பேச்சை கேட்டு கடுப்பான பாக்யா அவளை ஓங்கி அறைந்துள்ளார்.
இந்த ப்ரமோவின் தொடக்கத்தில், ராதிகா தனது வீட்டை காலி செய்துவிட்டமாக சொல்ல, கோபி ஏன் என்று கேட்கிறான் நீங்களும் இங்கு இருக்குறீங்க, அந்த வீட்டுக்கு எதற்காக வேஸ்டா வாடகை கொடுக்க வேண்டும். அதனால் தான் காலி செய்துவிட்டேன் என்று சொல்ல, என்னை நிம்மதியாக இருக்க விடவே மாட்டியா, என் குடும்பத்துடன் கொஞ்சநாள் நிம்மதியாக இருக்கனும் என்று சொல்லிவிட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விடுகிறான்.

இதை பார்த்த இனியா, எங்க டாடியை நிம்மதியா இருக்க விடுங்க, நீங்க இனிமே இங்க வராதீங்க, என்று சொல்ல, பாக்யா, அப்படி பேசக்கூடாது என்று இனியாவை கண்டிக்கிறாள் ஆனாலும் இனியா திரும்ப திரும்ப அதையே சொல்ல, கடுப்பான பாக்யா இனியாவை ஓங்கி அறையா ராதிகா ஷாக் ஆகிறாள். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.

Kerala Lottery Result
Tops