தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மீனாட்சி பொண்ணுங்க” சீரியல் அதன் பரபரப்பான கதைக்களத்தால் தலைசிறந்த சீரியல்களில் ஒன்றாக திகழ்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், நடிகர் ஆர்யன் வெற்றி என்ற கேரக்டராக நடிக்க, சௌந்தர்யா சக்தியாகவும், ஸ்ரீ ரஞ்சினி மீனாட்சியாகவும் நடித்து வருகிறார்கள். அவர்களுடன் சசிலயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர்.
இந்த கதை மூன்று பெண் குழந்தைகளின் வாழ்க்கை போராட்டங்களை விவரிக்கிறது. மீனாட்சி தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தை காப்பாற்ற மெஸ் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் போக்கில், பற்பல சிக்கல்களை சந்திக்கிறார். அவரது இரண்டாவது மகளான சக்தியுக்கும், ரங்கநாயகி மகன் வெற்றிக்கும் எதிர்பாராத விதமாக திருமணம் நடைபெறுகிறது.
சக்திக்கு முதலில் வெற்றி பிடிக்காத நிலையில், நாட்கள் நகர நகர வெற்றியை புரிந்து கொண்டு அவனை ஏற்று கொள்கிறார். ஆனால், பூஜாவின் சதி காரணமாக, வெற்றியும் சக்தியும் பிரிந்து வாழும் நிலைக்கு சென்றுவிடுகின்றனர். இந்த பரபரப்பான கதைக்களத்தின் உச்சத்தில், வரும் ஞாயிறு (ஆகஸ்ட் 4) அன்று, மொத்தம் இரண்டரை மணி நேரம் “மீனாட்சி பொண்ணுங்க” சீரியலின் கிராண்ட் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கிராண்ட் கிளைமாக்ஸில் நடக்கப்போகும் நிகழ்வுகளின் விவரங்கள் இப்போது வெளிவந்துள்ளன. ஊரில் கொட்டப்பனை என்ற திருவிழா நடைபெற உள்ளது. வழக்கம்போல் முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி எழ, மீனாட்சிக்கு என்றதும், ரங்கநாயகி அவமானம் அடைகிறார். வெற்றி சக்தியை வீட்டை விட்டு வெளியே துரத்த, ரங்கநாயகி அதற்கு நோ சொல்ல, வெற்றி கோபம் கொண்டு வெளியே கிளம்புகிறான்.
.
பூஜா தன்னை ஏமாற்றி சொத்துக்களை மாற்றி எழுதி கொண்டது ரங்கநாயகிக்கு தெரிய வருகிறது. இதனால், பூஜா ரங்கநாயகியை தீர்த்து கட்ட முடிவு செய்து, அவளை ஊருக்கு நடுவே கொளுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் குடிசையில் மறைத்து வைக்கிறார். இதற்கெல்லாம் மத்தியில், மீனாட்சி கையில் தீ சட்டியிடன் காட்டு கோவிலுக்கு கிளம்புகிறார். பெரிய கருப்பசாமி வேட்டைக்கு கிளம்பியுள்ளார்.
இதற்கிடையில், சக்தியை சரத் கடத்திச் செல்கிறான். அவனிடம் இருந்து தப்பித்த சக்தி புதை குழியில் விழுகிறார். சக்தியை தேடி வெற்றி அலைகிறான். ஒரு கட்டத்தில், சக்தி இருக்கும் இடத்தை கண்டறிந்து, அவளை காப்பாற்ற வெற்றியும் புதைகுழியில் குதிக்கிறார்.
மேலும், காட்டு கோவிலுக்கு சென்ற மீனட்சியை வலுக்கட்டாயமாக அழைத்து போட்டு தள்ள ரவுடிகளை ஏற்பாடு செய்கிறாள் புஷ்பா. இப்படி, நான்கு பக்கங்களிலும் பரபரப்பு, வார்த்தையின் முழு அர்த்தத்திலும் சண்டை நடைபெற இருக்கிறது. இந்த கிராண்ட் கிளைமாக்ஸ் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதால், “மீனாட்சி பொண்ணுங்க” ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மொத்த குடும்பமும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ போவது எப்படி? பூஜா, ரங்கநாயகி மற்றும் பிற வில்லன் கேரக்டர்கள் எப்படி பரிசோதிக்கப்பட போகின்றன? என பல கேள்விகளுடன், இந்த கிராண்ட் கிளைமாக்ஸ் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
“மீனாட்சி பொண்ணுங்க” சீரியலின் இந்த இறுதி கட்டத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இது ஒரு சமூக திரையரங்கமாக மாறி, ஒவ்வொரு ரசிகரின் மனதையும் உறுதி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.