kerala-logo

மீனாவுக்கு தெரிந்த உண்மை: ஸ்ருதியுடன் இணைந்து மாஸ்டர் ப்ளான்: அடுத்த வாரம் இதுதான் கதை!


விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஹினி எப்போது மாட்டுவார்? முத்துவுக்கும் அவங்க அம்மாவுக்கும் இடையில் என்ன பிரச்னை? இது எப்போது தெரியவரும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த வாரத்தில் மீனாவுக்கு அலங்காரம் செய்ய பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கிறது. 2 லட்சம் மதிப்புள்ள இந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என்றால், இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு அட்வான்ஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்ல, மீனாவும் அப்படியே செய்து அட்வான்ஸ் வாங்கிக்கொள்கிறாள் அதன்பிறகு இதை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி மீனா சந்தோஷப்பட, விஜயா பொறாமையில் சுற்றி வருகிறார்.
அப்போது சிந்தாமணி விஜயாவுக்கு போன் செய்ய, மீனா பெரிய ஆர்டர் வாங்கிய விஷயத்தை சிந்தாமணியிடம் சொல்ல, அந்த ஆர்டரை அவளுக்கு கிடைக்க செய்ததே நான்தான். இதுதான் அவள் எடுக்கும் கடைசி ஆர்டர் என்று சொல்கிறாள் இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், மீனா மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்க, முத்து நான் ரெடி பண்ணட்டுமா என்று கேட்க, வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன். என்னால முடியலனா உங்களிடம் கேட்கிறேன் என்று சொல்கிறாள்.

இதனிடையே அடுத்த வாரத்தில் மீனா தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்தை தெரிந்துகொண்ட நிலையில், அந்த மண்டபத்துக்காரர் பணம் கொடுக்கிறாரா என்று மீனாவிடம் அவளது அம்மா கேட்க, இல்லை இது பெரிய சூழ்ச்சி என்றும், இதை செய்தது அந்த சிந்தாமணிதான் என்று தெரிந்துகொண்டால், இதில் இருந்து தப்பிவிடலாம் என்று சொல்கிறாள். அதன்பிறகு மீனா ஸ்ருதியை சந்தித்து உண்மையை சொல்ல, இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஸ்ருதி கேட்கிறாள்.
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மீனா இந்த பிரச்னையில் இருந்து வெளியில் வருவாரா? அடுத்து என்ன நடக்கும், சிந்தாமணியின் ப்ளான் வொர்க்அவுட் ஆகுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Kerala Lottery Result
Tops