விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஹினி எப்போது மாட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன், முத்துவுக்கும் அவரது அம்மாவுக்கும் என்னதான் பிரச்னை என்பது குறித்து கேள்வியும் எழுந்து வருகிறது.
இதனிடையே இன்றைய எபிசோட்டில், அண்ணாமலையின் நண்பர் பரசுவின் மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மண்டபத்தில், 2 பேர், மது பாட்டிலுடன் சுற்றி வரும்போது அவர்கள் மீது முத்து மோதிவிட சரக்கு பாட்டில் கீழே விழுகிறது. இதை முத்து கேட்ச் பிடித்து இங்கு குடிக்க கூடாது வெளியில் போய் குடியுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறான்.
முத்து சரக்கு பாட்டிலுடன் இருப்பதை மனோஜ் பார்த்துவிடுகிறான். இதனால் முத்து மீண்டும் குடிக்க தொடங்கிவிட்டான் என்று நினைத்துக்கொண்டு விஜயாவிடம் சென்று, அம்மா அவன் மீண்டும் குடிக்க ஆரம்பிச்சிட்டான், இங்க எதாவது பிரச்னை பண்ணுவான் நாம இங்கிருந்து போய்விடலாம் என்று சொல்ல, விஜயா அண்ணாமலையிடம் இது பற்றி சொல்கிறாள். அதை நம்ப மறுக்கும் அண்ணாமலை, முத்துதான் இந்த கல்யாணத்தை நடத்துகிறான். அவன் இப்படி பண்ணமாட்டான் என்கிறார்.
அதன்பிறகு மீனாவிடம் சொல்ல, மீனாவும் முதலில் நம்ப மறுக்கும் நிலையில், முத்து எங்கே என்று தேட தொடங்குகிறாள். ரவி ஸ்ருதியிடம் விசாரிக்க, அவர்கள் தெரியவில்லை என்று சொல்ல, ஸ்ருதி எல்லோருடனும் ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறாள். அதன்பிறகு ரவியும் முத்துவை தேட தொடங்குகிறான். அப்போது அந்த குடிகாரர்கள், சமையல் அறைக்குள் சென்று, கறிக்கடைக்காரர், மணியிடம் ஊறுகாய் கேட்க, அவரும் சரக்கு அடிக்கவா என்று கேட்டுவிட்டு கொடுக்கிறார்.
அவர்கள் சரக்கை க்ளாசில் ஊற்றி வைக்க, அப்போது அந்த பக்கம் வரும் முத்து சரக்கை தட்டிவிட, அவன் மீது கொட்டிவிடுகிறது. மீண்டும், அவர்களை வெளியில் சென்று குடிக்குமாறு சொல்லிவிட்டு முத்து வர, மீனா அப்போது வருகிறாள்., அவரிடம் கல்யாண வேலை எப்படி நடக்கிறது என்று கேட்க, அது நடக்கிறது நீங்க குடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா என்று கேட்க, நான் குடிக்கவே இல்லை என்று முத்து எவ்வளவோ சொல்லியும், வாடை வருகிறது என்று சொல்கிறார்கள்.
அதன்பிறகு முத்து காரில் சென்று வேறு சட்டை மாற்றிக்கொண்டு வர, இப்போது வாடை வரவில்லை. இவர் குடிக்கவில்லை என்று நம்புகிறார்கள். அடுத்து மணியிடம் வரும் பரசு, தனது நண்பர் அண்ணாமலையை அறிமுகப்படுத்துவதாக சொல்லி அழைக்கிறார். மணியும் அவருடன் வர, அப்போது ஒரு வேலை வருகிறது. இதனால் அப்புறம் சந்திப்பதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
