kerala-logo

யார் என்ன சொன்னாலும் நீ என் ஹீரோ தான்: காதலருக்கு ஊக்கம் கொடுத்த அர்ச்சனா: பிக்பாஸ் ப்ரமோ வைரல்!


விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அதே பிக்பாஸ் ஷோவில் தனது காதலை உறுதி செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலில் அர்ச்சனா என்ற வில்லி கேரக்டரிலில் நடித்து வந்தவர் நடிகை வி.ஜே.அர்ச்சனா. சின்னத்திரையில் தொகுப்பாளியாக இருந்த இவருக்கு ராஜா ராணி 2 சீரியல் தான் அறிமுகம். சிறப்பாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகினார். தனது விலகல் குறித்து அர்ச்சனா எவ்வித காரணமும் சொல்லவில்லை.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்ற அர்ச்சனா இறுதியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இவர் பிக்பாஸ் சாம்பியன் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், இவர் சாம்பியன் ஆக சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். பிக்பாஸ் டைட்டில் வெற்றிபெற்ற உடனே, பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்த நடிகர் அருண் பிரசாத் – அர்ச்சனா இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் இந்த செய்த வதந்தியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அருண்பிரசாத் – அர்ச்சனா காதலை உறுதி செய்யும் வகையில் அர்ச்சனா அருண் பிரசாத் வெளியிட்ட வீடியோவுக்கு, தேங்கஸ் ஃபார் ஷூட்டிங் மை ஹீரோ என்று கமெண்ட் செய்திருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பது உறுதியான நிலையில், இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.

கடந்த பிக்பாஸ் சீசனில் அர்ச்சனா பங்கேற்றது போல், தற்போது அருண் பிரசாத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அர்ச்சனாவின் சிபாரிசில் தான் அருண் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அருண் பிரசாத்தை பார்க்க, அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள், கெஸ்டாக தற்போது பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். அர்ச்சனாவும், பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அருண் பிரசாத்தை சந்தித்துள்ளார்.
https://www.instagram.com/p/DEEnRYFNrrL/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
இந்த சந்திப்பின்போது, அருண் பிரசாத்துக்கு அறிவுரைகள் கூறிய அர்ச்சனா, யார் என்ன சொன்னாலும், நீ என் ஹீரோதான் என்று கூறியிருந்தார். இந்த ப்ரமோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அருண் பிரசாத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அர்ச்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Kerala Lottery Result
Tops