அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன், தற்போது நேசிப்பாயா என்ற படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2003-ம் ஆண்டு வெளியான குறும்பு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமகமானவர் விஷ்ணுவர்த்தன். தொடர்ந்து 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற படத்தை இயக்கியிருந்தார். நவதீப், ஆர்யா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு, பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம், யச்சன் ஆகிய படங்கயை இயக்கினார் விஷ்ணுவர்த்தன்.
இதில், அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் தவிர மற்ற அனைத்து படங்களிலும் ஆர்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இந்தியில் சிறீஷா என்ற படத்தை இயக்கிய விஷ்ணு தற்போது நேசிப்பாயா என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அதர்வாவின் தம்பி ஆகாஷ் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தில், அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஷ்ணுவர்த்தன் இயக்கிய முந்தைய படங்களைபோல், இந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசைமைத்துள்ளார். நேசிப்பாயா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய, இயக்குனர் விஷ்ணுவர்த்தன், எனது 2-வது படம் அறிந்தும் அறியாமலும். இந்த படத்தை பார்த்தவர்கள் யாரும் வெளியிடவிரும்பவில்லை. ஆனாலும் பல முயற்சிகளுக்கு பிறகு இந்த படம் வெளியானது. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு முழு காரணம்.
யுவன் இசையமைத்த பாடல்களை கேட்டு தான் மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார்கள். அப்படி வந்தபோது தான் படம் குறித்து வெளியில் பேச தொடங்கியபோது, தியேட்டருக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்தது. நான் 7-ம் வகுப்பு படிக்கும்போலதில் இருந்தே யுவன் சங்கர் ராஜாவுக்கும் எனக்கும் நெருக்கமான நட்பு இருக்கிறது. இப்போது இருப்பது போல் அவர் சாதுவான ஆள் கிடையாது. பெரிய குறுப்புத்தனம் பிடித்தவர். அதிகமாக ப்ராங் செய்வார்.
இப்படித்தான் ஒருமுறை எனக்கு வீடியோ கால் செய்து, பிரேம்ஜியை நாயகனாக வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன் என்று சொன்னார். நான் ஷாக் ஆகிவிட்டேன். யுவன் நல்ல யோசிச்சு தான் சொல்றீங்களா? உண்மையாகவா என்று கேட்டேன். லைவ் வீடியோவில், அவர் உண்மைதான் என்று சொன்னார். நான் நினைத்தேன், யுவன் பணம் எல்லாம் வேஸ்டாக போக போகுது என்று. ஆனால் அதன்பிறகு தான் தெரிந்தது அது ப்ராங் என்று. இதை விட பெரிய ப்ராங்க் எல்லாம் செய்திருக்கிறார் என்று விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார்.
