kerala-logo

ரஜினிகாந்த் பிறந்தநாள்: மர துகள்களால் ஜெயிலரை வரைந்து அசத்திய கோவை பெண்!


கோவை ஆலாந்துறை அடுத்த கருண்யா பகுதியை சேர்ந்த ரேவதி  சௌந்தர்ராஜன். இவர் தனியார் பள்ளி விடுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஓவியம் மீது ஆர்வம் கொண்டதால் மரத் தூள்கள், காய் கறி, தானிய வகைகள் என பல்வேறு இயற்கை பொருட்கள் கொண்டு ஓவியம் வரைந்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஓவியங்களை வரைந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் சாதனை படைத்த ஜெயிலர்  படத்தின் காட்சியை  மரத் துகள்களினால் படம் வரைந்து அசத்தி உள்ளார். மேலும் மரத் துகள்களினால் ஓவியம் வரைவதால் சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது, எனவும் ரசாயனங்கள் கொண்டு ஓவியம் வரைந்தது இல்லை என தெரிவித்து உள்ளார்.
ஓவியர் ரேவதி சௌந்தர்ராஜன் நடிகர் ரஜினிகாந்த் ரசிகை என்பதால் இந்தப் படத்தின் வெற்றிக்காகவும் பிறந்த நாள் அன்பளிப்பாக அவருடைய உருவப்படத்தை மரத் தூளினால் வரைந்து அவருக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

Kerala Lottery Result
Tops