தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வலம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் இருக்கும் நிலையில், அவர் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பு தொடர்பான ப்ரமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர் லியோ, கமல் நடிப்பில், விக்ரம் உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த அவர், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி 2, கமல் நடிப்பில் விக்ரம் 2, சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் ஆகிய படங்களை இயக்க உள்ளார்.
இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருக்கும் லோகேஷ் கனகராஜ், மைக்கேல், ஃபைட் க்ளப் ஆகிய படங்களை தனது ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் மூலம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது மிஸ்டர் பாரத் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்புடன் ப்ரமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.
பிரபல யூடியூபர் பரத் நாயகனாக நடிக்க, அதே யூடியூபர் நிரஞ்சன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஓ மணப்பெண்ணே மற்றும் மாடர்ன் லவ் சென்னை , ஸ்வீட் காரம் காபி மற்றும் சட்னி சாம்பார் போன்ற வெப் தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பால சரவணன், நிதி பிரதீப், ஆர் சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
Here’s the announcement of #MrBhaarath 🔥🔥https://t.co/OnJczS6cxlKicked to collaborate with talents @Bhaarath_Offl, @Niranjan_Dir, @samyukthavv and the entire team for this exciting project ❤️❤️❤️ Need all of your lovely support and wishes like always 🙏❤️@Jagadishbliss… pic.twitter.com/duf5xbtkxS
பிரணவ் முனிராஜ் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண், எடிட்டர் திவாகர் டென்னிஸ் மற்றும் கலை இயக்குனர் பாவனா கோவர்தன் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். 5 நிமிடம் கொண்ட இந்த ப்ரமோ வீடியோவில், படத்தில் ப்லெட், பவுடர் வராம பார்த்துக்கோங்கடா என்று லோகேஷ் சொல்கிறார். பொதுவாக லோகேஷ் இயக்கும் படங்களில் ரத்தம் தெறிக்கும் காட்சியும், போதை மருத்து தொடர்பான காட்சிகளும் இருக்கும் என்ற விமர்சனம் எழுத்தால், இந்த படம் அந்த வகையில் இருக்காது என்று லோகேஷ் சொல்லாமல் தெளிவுபடுத்தியுள்ளார்.
