ரம்யா பாண்டியனின் திருமணம் ரிஷிகேஷில் கங்கை கரையில் நடந்த நிலையில், திருமணத்துக்கு முன்னதாக நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஹல்தி நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொண்டார்கள் பாருங்கள்.
பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியன்தான் ரம்யா பாண்டியனின் சித்தப்பா. சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் ரம்யா பாண்டியன், முதலில் எடுத்தவுடன் சினிமாவில் நடிக்கவில்லை. ஒரு போட்டோஷூட் நடத்தி ஒரே நாளில் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார்.
ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட்டுக்குப் பிறகு, விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்தார். ரம்யா பாண்டியன் மலையாளத்தில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்தார். தற்போது, இடும்பன்காரி படம் மட்டுமே கைவசம் உள்ளது.
இந்த நிலையில், ரம்யா பாண்டியன் காதலர் லோவல் தவானை இருவீட்டார் சம்மதத்துடன் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் திருமணம் செய்து கரம் பிடித்தார்.
A post shared by SriRamya Paandiyan (@actress_ramyapandian)
யோகாவில் ஈடுபாடு கொண்ட ரம்யா பாண்டியனுக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் லோவல் தவானுக்கும் இடையே முதலில் நட்பில் தொடங்கிய உறவு காதலாக மாறியது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், நவம்பர் 8-ம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் மிகவும் எளிமையாகத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ரம்யா பாண்டியன் வெளியிட்ட அவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலானது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ரம்யா பாண்டியனுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
இந்நிலையில், ரம்யா பாண்டியனின் திருமணத்திற்கு முன் நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரம்யா பாண்டியனின் ஹல்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமுக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ரம்யா பாண்டியனின் ஹல்தி நிகழ்ச்சியில் எல்லாருமே மஞ்சள் நிறத்தில் இருக்கிறார்கள்.
A post shared by SriRamya Paandiyan (@actress_ramyapandian)
ரம்யா பாண்டியன் மஞ்சள் நிற ஆடையில், கூலிங் கிளாஸ் அணிந்து மாஸாக வைப் செய்துள்ளார். ஹல்தி நிகழ்ச்சியில், ரம்யா பாண்டியன் மற்றும் லோவல் தவான் குடும்பத்தினர்கள் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.