kerala-logo

‘ரொம்பவும் பிடித்த செலிபிரிட்டி க்ரஷ் இவர்தான்; எந்த சந்தேகமும் இல்ல’: நடிகை கயாடு ஓபன் டாக்


அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
இதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், அவரின் பெயர் அந்த அளவிற்கு வெளியில் தெரியவில்லை. தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் நடித்தற்கு பிறகு தான் அவர் மிகவும் பிரபலமாகி இருக்கிறார். டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை கயாடு லோஹருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது கயாடு, ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் ஜாதி ரத்னாலு என்கிற தெலுங்கு பட இயக்குனர் கே.வி.அனுதீப்பின் ‘பங்கி’ படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் உள்ளது.
செலிபிரிட்டி க்ரஷ் – கயாடு பதில்

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த செலிபிரிட்டி க்ரஷ் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கயாடு. சேலம் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை கயாடு லோஹர் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய நடிகை கயாடு லோஹர், தனக்கு பிடித்த செலிபிரிட்டி க்ரஷ் ‘தளபதி’ விஜய் தான் என்று கூறியுள்ளார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், விஜய் நடித்த ‘தெறி’ படம் தான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Kerala Lottery Result
Tops