kerala-logo

ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்: என்ன பெயர் தெரியுமா? இந்திரஜா வைரல் பதிவு!


நடிகர் ரோபோ சங்கரின் மகள், இந்திரஜா – கார்த்திக் தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், இந்த குழந்தைக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய வரவெற்பை பெற்றவர் ரோபோ சங்கர். இவரது காமெடிக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. சின்னத்திரை மட்டுமல்லாமல், அவ்வப்போது வெள்ளித்திரையிலும் நடித்து வந்த ரோபோ சங்கர், அஜித்துடன் விஸ்வாசம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ரோபோ சங்கரை போலவே அவரது மகள் இந்திரஜாவும் நடிகையாக ஒரு சில திரைப்படங்களில் நடித்மதுள்ளார். குறிப்பாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் சூரியின் ஜோடியாக இந்திரஜா நடித்திருந்தார். விஜயுடன் இவர் நடித்த பிகில் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் படமாக அமைந்து இந்திரஜாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அறிமுகத்தையும் கொடுத்தது.
இதனிடையே உறவினர் கார்த்திக் என்பவருடன் இந்திராஜாவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கர்ப்பமாக இருந்த இந்திரஜா, கடந்த ஜனவரி மாதம் ஆண்’ குழந்தைக்கு தாயானார். இதன் மூலம் தாத்தா ஆன ரோபோ சங்கர் தனது இந்த கொண்டாட்டத்தை குடும்பத்துடன் செலிபிரேஷன் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை ரோபா சங்கர் தனது மனைவி, மகள், மருமகன், பேரனுடன் சந்தித்தார். இந்த இந்த சந்திப்பின்போது இந்திரஜா குழந்தைக்கு பெயர் வைத்த கமல்ஹாசன், ‛நட்சத்திரன்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
A post shared by தொடர்வோம் கார்த்திக் (@dr.thodarvom_karthick)
இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்திரஜா – கார்த்திக் தம்பதி ‛‛எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் டாக்டர் கமல் ஹாசன் ‛நட்சத்திரன்’ என பெயரிட்டு வாழ்த்தினார். என்றும் உங்கள் அன்புடன் எங்கள் நட்சத்திரன் கார்த்திக்” என்று பதிவிட்டுள்ளார்.

Kerala Lottery Result
Tops