ஆந்திராவில் பிறந்த நடிகை தபு 1982-ம் ஆண்டு பாசார் என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
கூலி நம்பர் 1 என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான தபு, அதன்பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.
1996-ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தபு, இந்த படத்தின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.
1997-ல் வெளியான இருவர் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அர்ஜூனுடன் தாயின் மணிக்கொடி, மம்முட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் வெளியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் தபு தமிழில் நடித்தார்.
கடைசியாக தமிழில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான சினேகிதியே படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தபு அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை.
தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் தபு, சமூகவலைதளங்களில் க்ளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள புகை்பபடங்கள் வைரலாகி வருகிறது.
