kerala-logo

வரலட்சுமி முதல் சித்தார்த் வரை: 2024-ல் திருமண வாழ்க்கையில் இணைந்த சினிமா பிரபலங்கள்!


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பரை கோவாவில் திருமணம் செய்துகொண்டார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், நடிகை அதிதி ராவ் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா ஆகாஷ், நடிகர் சாய் வி்ணுவை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை திருணம் செய்துகொண்டார்.
நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகர் தம்பி ராமையாவின் மகனும் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். ஐஸ்வர்ய விஷாலின் பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், உமாபதி தனது தந்தை தம்பி ராமையா நடிப்பில் ராஜாகிளி என்ற படததை இயக்கியுள்ளார்.
பிரபல நடிகர் ஜெயராமின் மகனும், சுதாரா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் திருநங்கையாக நடித்து பிரபலமானவருமான காளிதாஸ் ஜெயராம் தாரிணி காளிங்கராயர் என்பரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
பீஸ்ட் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து கவினின் டாடா படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான நடிகை அபர்னா தாஸ், தீபக் பரம்போல் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
குட்நைட் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மீதா ரகுநாத், கடந்த மார்ச் 17-ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.
லப்பர் பந்து படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை சுவாசிகா, மலையாள டிவி நடிகரு பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்கள் திருமணம், கடந்த ஜனவரி 24-ந் தேதி நடைபெற்றது.
நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து செய்த நடிகர் நாக சைதன்யா, கடந்த டிசம்பர் 4-ந் தேதி நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து கடந்த மார்ச் 23-ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் நடந்தது.
லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா, பல வருடங்களாக நடிகர் சாஹீர் இக்பாலை காதலித்து வந்தார். இதனையடுத்து, இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘வீரே கி’ திரைப்படத்தில் நடித்த புல்கித் சாம்ராட் மற்றும் கிருத்தி கர்பந்தா இருவரும் காதலிப்பதாகவும் டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், கடந்த மார்ச் 15-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது.

Kerala Lottery Result
Tops