கேப்டன் விஜயகாந்துக்கு திருப்புமுனை கொடுத்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ஒரு படத்திற்கு, விஜயகாந்துக்காக ஒரு பாடல் எழுத வந்த கவிஞர் புலமைபித்தன் இந்த பாடலை என்னால் எழுத முடியாது என்று சொல்லி மறுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில், விஜயகாந்த் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், விஜயகாந்துடன் இணைந்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தது. அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் பெரியண்ணா. 1999-ம் ஆணடு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு முழுநீள கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
சூர்யா நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், மீனா, மானசா, தேவன், மனோரமா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் பரணி தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தின் இடைவேளைக்கு பிறகுதான் விஜயகாந்த் படத்தில் என்ட்ரி கொடுப்பார் என்றாலும், இந்த படம் முழுநீள விஜயகாந்த் படம் என்றே ப்ரமோட் செய்யப்பட்டு இன்றுவரை அப்படியே சொல்லப்படுகிறது.
அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும், இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் ஹிட் கொடுத்திருப்பார் பரணி. 7 பாடல்கள் இடம்பெற்ற இந்த படத்தில் 3 பாடல்களை பரணியே எழுதியிருந்த நிலையில், வாசன்,இரு பாடல்களைளும், அறிவுமதி மற்றும் புலமை பித்தன் ஆகியோர் ஒரு பாடலையும் எழுதியிருந்தனர். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட க்ளாசிக் நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் புலமைபித்தன், அழகான தமிழில் பாடல் எழுதுவதில் வல்லவர்.
அழகு தமிழ் பாடல் எழுதி பிரபலமான புலமைப்பித்தன், இந்த படத்தில் பொள்ளாச்சி மலை ரோட்டுல என்ற பாடலை எழுதியிருந்தார். இன்றைய பேச்சு வழக்கை வார்த்தைகளாக இந்த பாடலில் எழுதி இருந்தலும, படக்குழு வற்புறுத்தியதால், புலமைப்பித்தன் இந்த பாடலை எழுதியுள்ளார். ‘’பொள்ளாச்சி மலை ரோட்டுல, ஒரு பொண்ண பாரு சோக்குல’’ என்ற வரிகளை இசையமைப்பாளர் பரணியே எழுதிய நிலையில், மீதமுள்ள பாடலை புலமைப்பித்தன் எழுத வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் கூறியுள்ளனர்.
இந்த பாடலை எழுத வந்த புலமைப்பித்தன் முதல் 2 வரிகளை பார்த்துவிட்டு, இப்படி ஒரு பாடலை என்னால் எழுத முடியாது. என்னை ஆள விடுங்க என்று சொல்லி அங்கிருந்து புறப்பட தயாராகியுள்ளார். ஆனால் இசையமைப்பாளர் பரணி, எனக்கு இந்த 2 வரிகள் பிடித்துள்ளது. அதனால் மீதமுள்ள பாடலை நீங்கள் எழுதுங்கள் என்று சொல்லி சமாதானப்படுத்தி வற்புறுத்தி இந்த பாடலை எழுத வைத்துள்ளனர். இந்த பாடலின் இடையில், விஜயகாந்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2 வரிகள் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
